பக்கம்:ஆழ்வார்கள் காலநிலை.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

21 முன்னுரை சைன முனிவர் கையாண்ட, அநசாமுதலிய கடு நோன்புகளும் மந்திரதந்திர வன்மையும் தமிழர்க்கு அன் னோரிடமிருந்த மதிப்பை மிகுதிப்படுத்தியன. இவர்களை அரசரும் பிறருங் கௌரவித்து வந்ததுமட்டுமன்றி, அவருட் சிலர் அம்மதங்களைத் தழுவி இவர் நோக்கம் முடிவு பெறுதற்குப் பெருந்துணையுமாயினர். இவ்வாறு இவர்க்கு அனுகூலராய் நின்ற தென்னாட்டரசருள்ளே, பல்லவர்களைச் சிறந்தவராகச் சொல்லலாம். சைனமதத் தின் செல்வாக்கு, ஏனையவற்றினும் 6, 7ஆம் நூற்றாண்டுகளிற் செழித்திருந்ததற்கு இவ்வரசர்களே காரணபூதராயினர். இங்ஙனம் பேரரசர்களது ஆதரவும், அம்மதப் பிரசாரகரது பேருழைப்பும் சைனசமயத்தை உச்ச நிலைக்குக் கொண்டு வந்தனவென்றும், வேள்வி முதலிய சடங்குகளில் விசேடப் பற்றுக் கொண்டொழுகிய வைதிகமதங்கள் இதன் முன்னே மேலோங்க இட மின்றித் தளர்வடையத் தொடங்கின என்றும் சொல்லத் தடையில்லை. மாற்றமும் வளர்ச்சியும் இவ்வாறு புறச்சமயவெழுச்சியால் நாட்டார்க்கு வைதிகமதங்களிற் பற்றுக் குறையவும், அவற்றின் பழைய தர்மங்கள் தளர்வடையவும் நேர்ந்ததே, அம் மதங்களிற் பெரியோர்களுடைய அவதாரங்கள் நிகழ் வதற்குக் காரணமாயிற்று. இக்காலத்தே சைவ வைஷ்ணவ அடியார்களிற் சிறந்தோர் பலர்தோன்றி, சநாதன தர்மங்களை மலைமேலிட்ட விளக்காக்கி வைத் தனர். இன்று நான் எடுத்துக் கொண்ட விஷயத்துக் கேற்பத் திருமாலடியாரான அத்தகைய பெரியோர் களைப் பற்றித் தெரிந்தவற்றை இனிக் கூறுகின்றேன்.