பக்கம்:ஆழ்வார்கள் காலநிலை.pdf/317

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

அருளிச் செயற் பாடவமைதி 307 அவனைப்பற்றி துஷ்கர்ம பலத்தை அனுபவித்தார்” என்பது வியாக்யானபந்தி. இக்கருத்தின்படியும், முன் பாட்டின் அந்தத்துக்கியையவும் "யாரே துயழருந்தார் துன்புற்றார் யாண்டையார்” என்ற பாடமே பொருந்துவதாம், யாண்டையார் எங்குள்ளார் எ-று. இன்று யாண்டையனோ தோழி. (குறுங், 379) என்ப ஆண்டையார் எனின் அங்குள்ளார் என்றாகும். 'ஆண்டை -அங்கு; யார்-யாவர்' என்று பிரித்துப் பொருள் கூறலாம். அப்போது, ஆண்டை என்பது நின்றுவற்றுதலோடு பெரியவாச்சான்பிள்ளை வியாக்யானத்துக்கு இயைவதும் அன்று. ஆண்டை யார் எங்குள்ளார்” என்று அச்சிடப்பட்டுள்ள அவ் வியாக்யானபந்தியினும் யாண்டையார்' வன்று திருத்திக்கொள்க. 13. ஷ திருவந்தாதி 31-ஆம் பாசுரத்தில் - நறவேற்றான், பாகத்தான் பாற்கடலு ளான் என்பது வழங்கும் பாடம். நறவு 'ஏற்றான் என்பதற்கு நறவை ஏற்ற ருத்ரன் என்றும், நறவையும் ஏற்றையும் உடைய ருத்ரன் என்றும் இருபொருள்களை வியாக் யானம் கூறுகின்றது. "நறவு தேனாய, தேன் போலே போக்யமான கங்கையை உடையவன்" என்று அரும் பதம் இதற்கு விளக்கம் கூறும். பரம்பரையாக வழங்கிய பாடத்தை இப்பொருள்கள் நயப்படுத்து வனே. ஆயினும், சப்தத்தை நெருக்கியே இப்பொருள் கொள்ளப்படுதலால், ஆதிப்பாடம் அவ்வாறு கொள் ளாதபடி அமைந்திருந்து பின் மாறியதுபோலும் என்றே கருத நேர்கின்றது. அப்பாடம்