பக்கம்:ஆழ்வார்கள் காலநிலை.pdf/316

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

306 ஆழ்வார்கள் காலநிலை என்பது இக்காலத்துப் பாடம். இதனுள், பசுமை+ ஓதம் -பைங்கோதம் என்று பண்பீறு திரிந்ததென்றும், பை. இங்கு (- தங்கிய)-ஓதம். என்று பிரித்தும் பொருள் கூறுவர். இச்சொற்புணர்ப்பும் பொருளும் ஏற்கத்தக்கனவாகா. பெரியவாச்சான்பிள்ளை வியாக் யானத்தில்.-- “ச்ரமஹரமான வடிவையுடையவனுடைய படி” என்றே உள்ளது, ஓதம்' என்பதற்குரிய பொருள் "இதனிற் காணப்படாமை குறிப்பிடத்தகும், அதனால், அவ்வியாக்யானத்துக்கு ஏற்றவாறு, பைங்கோல வண்ணன் படி" என்ற பாடம் இருந்து பின் மாறிய தாகக் கருத இடமுண்டு. கார்க்கோலமேனியானை' என்ற கம்பர்வாக்கும் ஒப்பிடுக. இனி 'பங்கோத வண்ணன் படி' என்று பாடங் கொள்ளினும் பொருந்தும். பங்கோதம்-அளறுபட்ட கடல், பங்கமார்கடல்' என்பர் (தேவா. திருவேட்ட குடி,3). பங்கு -சேறு, பங்கம் என்பதன் திரிபு; (சங்கு போல) + ஓதம் என்றேனும், பங்க (சேறு) + ஓதம் என்றேனும் பிரித்துக்கொள்க. எவ்வகையினும், "பைங்கோத வண்ணன்' என்பது திருத்தம் பெறத் தக்கது. 12. ஷ திருவந்தாதி, 27-ஆம் பாட்டில்-- “ஆரே துயருழந்தார் துன்புற்றார் ஆண்டையார் - ... நீரணைமேற் பள்ளி . அடைந்தானை நாளும் அடைந்து" என்று பாடம் ஓதப்படுகின்றது. திருமாலையடைந்து துயருழந்தவரும் துன்பமுற்றவரும் யாவர், எங்குள்ளார்' என்பது பொருள், எக்காலத்தில் எத்தேசத்தில் யார்