பக்கம்:ஆழ்வார்கள் காலநிலை.pdf/339

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

அருளிச் செயற் பாடவமைதி 329 திருவாக்கை அடியொற்றியே 'ஒருமலை தகைந்ததாக, தகைந்தவளவிலே' என்று பெரியவாச்சான்பிள்ளை பொருளருளிச்செய்தனர் என்க, 'நினைத்த, நினைந்த' என்பனபோலத் தகைத்த, தகைந்த என்பவை ஒத்த செயப்படுபொருள் குன்றாவினைகளேயாம். ஸ்வாமி குறித்தபடி, கைத்த' என்று பாடங்கொள்ளின், அது, தகைந்த என்ற பொருளை நேரே பயவாமையும் காண்க. *கடும்புனற்கயத்த' என்பதுபோல, ஏட்டெழுத்துக்களின் மயக்கத்தால் வழங்கிய பாடங்கள் அருளிச்செயல் வியாக்யானங்களிலும், முன்னூல்களிலும் உண்டு. உதாரணமாக :-- பொருள்வயிற் பிரிகிறேன்' என்றிருத் தற்குரிய வியாக்யானத்தொடரை, பொருளவையிற் பிரிகிறேன்' (பெரிய திருமொழி, 9--3--2) என்றும், "நானவல் அப்பம்' என்ற தொடரை நான் வல அப்பம்' (க்ஷ 10-5-6) என்றும் பின்னோர் பிரித் திடர்ப்பட்டமை ஒப்பிடத்தக்கது. இவற்றுள், பொருள்வயின் என்பதில் வயி என்பது வை என ஓசையொப்புமையால் மாறியது போன்றதே தகைத்த என்பது தகய்த்த என மாறியதும் என வுணர்க. பரிபாடல் உரைப்பாயிரத்தில், “எழுதினர் பிழைப்பும் எழுத்துரு வொக்கும் பகுதியின் வந்த பாடகர் பிழைப்பும் திருந்திய காட்சியோர் செவிமுதல் வெதுப்பலின் மதியின் றிகைப்பு விதியுளி யகற்றி”ப் பரிமேலழகர் அந்நூற்கு உரையிட்ட அருமையை அவர் காலத்து அபியுக்தரொருவர் பாராட்டியிருத்தலும் காண்க. 27. இனி, இப்பாடலைக்கொண்ட பதிகமுழுதினும் “வதரியாச்சிராமத்துளானே