பக்கம்:ஆழ்வார்கள் காலநிலை.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

பதிப்புரை ச. மெய்யப்பன், எம். ஏ.,

தமிழ் விரிவுரையாளர்,

அண்ணாமலைப் பல்கலைக்கழகம்

தமிழ் இலக்கிய உலகில் இரட்டைப் புலவர்கள் இணைந்து பாடிய புலவர்கள். ஒருவர் முற்பாதியைப் பாட மற்றொருவர் பிற்பாதியைப் பாடி நிறைவு செய்ய இணைந்து வாழ்ந்தவர்கள். இலக்கண உலகில் விசாகப் பெருமாளையர், கந்தப்பையர் ஆகிய இருவரும் சிறந்த புலமையாளர்கள்; தணிகை தந்த செல்வர்கள்.
ஆய்வு லகில் ரா. இராகவையங்காரும் மு. இராகவையங்காரும் குறிப்பிடத்தக்க பேரறிஞர்கள்.

'ஐயங்கார் இருவரும் நெருங்கிய உறவினர்; பாண்டித்துரைத் தேவரால் தோற்றுவிக்கப் பெற்ற மதுரைத் தமிழ்ச் சங்கத்தின் தலைமையாளர்கள்; அச்சங்கம் வளரப் பாடுபட்ட ஆசிரியர்கள். மதுரைத் தமிழ்ச் சங்கத்திலிருந்து வெளிவந்த செந்தமிழ்” என்னும் இதழ், வாழ்வும் வளமும் பெற உதவிய கருத்துக் கொடையாளர்கள். சேதுபதி மன்னர்களின் அன்புக்குப் பாத்திரமான புலமைச் செல்வர்கள். மு. இராகவையங்கார் கால ஆய்விலும் கல்வெட்டு ஆய்விலும் மிக வல்லவர், சென்னைப் பல்கலைக் கழகம் பெருமுயற்சி கொண்டு தொகுத்த தமிழ் அகராதியில் இவர் பங்கு தலையாயது. செந்தமிழ்” வாயிலாக இவர் தொகுத்து வெளியிட்டு நூலாக்கிய பெருந்தொகை, இவர் கொங்குதேர் வாழ்க்கையர்" என்பதற்கு நல்ல சான்று. (தொல்காப்பியப் பொருளதிகார ஆராய்ச்சி' இவரின் இலக்கணப் புலமையும் ஒப்பாய்வும் காட்டும் இலக்கண நூல், இவர் வாழ்ந்த காலம் - இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதி . தமிழக வரலாறு தெளிவு பெற வேண்டும் என்று அறிஞர்கள் அயராது பாடுபட்ட காலம், கோபிநாதராவ், வெங்கையா போன்ற அறிஞர்கள் கல்வெட்டுக்களை ஆராய்ந்து பல்லவர் பாண்டியர் சோழர் வரலாறுகளை வெளியிட்டனர். துப்ராயில், டாக்டர் எஸ். கிருஷ்ணசாமி ஐயங்கார்.