பக்கம்:ஆழ்வார்கள் காலநிலை.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

42 ஆழ்வார்கள் காலநிலை பொய்கையார் வாக்காக யாப்பருங்கல விருத்தி காரர் காட்டிய வெண்பாக்களுள், தமிழரசர்மூவரும் தொண்டைமானும் கூறப்படுகின்றனர். இதனால் தமிழிருடியாகிய பொய்கையார், தங்காலத்து அரசர் களுடன் பழகியவரென்பது பெறப்படும். இவ்வாறு, முனிவர்களான இன்னோர் உலகப்பிரவிருத்தியுடை யராய் மானிடம் பாடினரெனல் பொருந்துமா என்று சிலர் சங்கிப்பர். பரிசுபெற்று உயிரோம்புங்கருத்தோடு மானிடம்பாடிய புலவருள் ஒருவராக இவரைக் கருதுவது என்னோ உலகநன்மை புரிய விரும்பியும், அரசர்க்கு இடித்துறுதி கூறுதல் பற்றியும், மற்றும் அவரது பெருந்தன்மைகளைக் கருதியும் இப்பெரியார்கள் மானிடம்பாட நேர்ந்ததாயின் அஃது இவர்க்குக் குறை வாகுமோ? பொய்கையார் போன்ற முனிவர்களாலும் பாடப்பெற்றவராயின், அவ்வரசர்கள் பெருமையால் நிறைந்தவர்களாகவே கருதத் தடையென்னை? அதனால், “ கோவாகி மாநிலங் காத்துநங் கண்முகப்பே மாவேறிச் செல்கின்ற மன்னவரும்-பூமேவும் செங்கமல நாவியான் சேவடிக்கே யேழ்பிறப்பும் தண்கமல மேய்ந்தார் தமர்" (இரண். திருவம், 69) என்று பூதத்தாழ்வார் அருளியபடி, அவர்காலத் தரசர்கள் திருமாலடிமையிற் சிறந்த பெரியோராய் விளங்கினர் என்றே கொள்ளற்குரிய ரென்கஅன்றியும்-- “ பழுதே பலபகலும் போயினவென் றஞ்சி யழுதே னரவணைமேற் கண்டு-- தொழுதேன்" (16) 1. தொல்காப்பியம், புறத். 70, நச். உரை.