பக்கம்:ஆழ்வார்கள் காலநிலை.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

திருமழிசையாழ்வார் 53 சத்தவனென்று பின்பழகிய பெருமாள் சீயர் குருபரம் பரை முதலியன கூறுகின்றன. இது பழையதொரு வரலாற்றைப் பற்றி வழங்கியிருக்கவேண்டும் என்பதில் ஐயமில்லை. 3-ம் நூற்றாண்டுக்கு முன்பு, காஞ்சீபுரத்தைத் தலைநகராகக்கொண்டு பல்லவர் தென்னாடாண்டவர் என்பதற்கு எவ்வகையாதாரமும் இல்லையென்று சரித் திரவறிஞர் கருதுவர். இக்கருத்து உண்மையுடைய தாயின், திருமழிசையாழ்வார் அந் நூற்றாண்டுக்குப் பின்பே விளங்கியவர் என்பது பெறப்படும். இவ்வாழ்வார்நாளிலிருந்த பல்லவர் இன்னார் என்று தெரிய இடமில்லையேனும், பழையோராகிய பொய்கை யார்க்குச் சமகாலத்தவராகக் கூறப்படுவதால், திருமழி சைப்பிரான், முற்பட்ட பல்லவவேந்தர் சிலரது ஆட்சிக் காலத்தில் விளங்கியிருந்தவர் என்றே கருதலாம். அன்றியும், இவ்வாழ்வார் திருவாக்கினின்றே அறியப் படும் மற்றொரு குறிப்புமுண்டு. * காப்பு மறந்தறியேன் கண்ணனே யென்றிருப்பன் ஆப்பங் கொழியவும் பல்லுயிர்க்கும்--ஆக்கை கொடுத்தளித்த கோனே குணப்பரனே யுன்னை விடத்துணியார் மெய்தெளிந்தார் தாம்." (நான். திருவந், 93.) என்று தம் திருவந்தாதிப் பாசுரத்தில் திருமாலை இவ்வாழ்வார் குணப்பரனே என்று விளித்தல் காணலாம் குணபரன்-விளக்கம் குணபரன் என்ற பெயர் முதல் மகேந்திரவர் மனுக்கு உரியதென்பது சாஸனங்களால் தெளியப் பட்டது. இப்பல்லவன் பெயரால் திருமாலை ஆழ்வார் கூறுதல், அவ்விருவரும் ஒருகாலத்தவரென்பதைக்