பக்கம்:ஆழ்வார்கள் காலநிலை.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

68 ஆழ்வார்கள் காலநிலை பட்ட குடமூக்கிற் பகவரும் ஒருவராதற்குரிய பொருத்த மிருத்தல் தெரியலாம். இனி இப்பகவர் செய்த நூல் வாசுதேவனார் சிந்தம் என்னும் பெயர்பெற்றதென்று அவ்விருத்தி கூறு கின்றது. இப்பெயர்க்கு வாசுதேவனாகிய திருமாலைப் பற்றிப் பாடப்பட்ட சிந்தநூல்' என்பது பொருளாகும். இந்நூற்பெயரை நோக்குமிடத்து, இது திருமழி சையார் அருளிய திருச்சந்தவிருத்தத்தினும் வேறாகா தென்றே கொள்ளும்படியுள்ளது. (வாசுதேவனார்) சந்தம்' என்பதே சிந்தம்' என்று பிற்காலத்துத் திரிந்திருத்தல் வேண்டும். வளாகம், 'கலாய்த்தல் என்பன விளாகம்' கிலாய்த்தல் எனமொழி முதல் அகரம் இகரமாகத் திரிதல் பண்டைக்கால முதலேயுள்ள வழக்காதலுங் காண்க, அறிவுடையநம்பி என்பவரால் வஞ்சியடிகளிற் செய் யப்பெற்ற சிந்த நூலொன்றும் யாப்பருங்கலவிருத்தி காரரால் அவ்விடத்தே மேற்கோள் காட்டப்பட்டுளது... வாசுதேவனார் சந்தமும் அத்தகையதுபோலும் என்ற கருத்தால், பின்னோர் அதனையும் சிந்தம் என்று திரித்து வழங்கியிருத்தல் வேண்டும். -வாசுதேவனார் சிந்தமும் அறிவுடைநம்பியது போலவே வஞ்சியடியில் அமைந்திருந்ததாயின், அந் 1. “பைம்பொழில் விளாகத்து (தேவ. பக். 734, பாட். 6, சுவாமிநா, பதிப்பு. 2. நெண்டிக் கொண்டேயுங் கிலாய்ப்பன்" (ஷை, 743, 3. யாப். வி. 93, பக். 392.