பக்கம்:ஆழ்வார்கள் காலநிலை.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

திருமழிசையாழ்வார் 69 நம்பிசெய்த நூலை மேற்கோள்காட்டிய யாப்பருங்கல விருத்தியுடையார், அவ்விடத்தே குடமூக்கிற் பகவர் செய்த நூலையும் குறிப்பிட்டெழுதியிருப்பரென்பது ஒருதலை, அங்ஙனம் அவர் எழுதாமையால், அப்பகவர் செய்த வாசுதேவனார்சிந்தமென்பது, திருமழிசைப் பிரான் அருளிய திருச்சந்தவிருத்தமாகவே கருதற்குப் பொருத்தம் பெரிதும் உண்டென்க, குடமூக்கிற்பகவரது சிந்தத்துள், எழுத்துக்கள் மிக்கும் குறைந்தும் வந்த பாடல்கள் உள்ளன வென்றும், அவை ஆரிடமாமென்றும் அவ்விருத்தி யுடையார் எழுதியவாறே, திருச்சந்த விருத்தத்துள்--- * ஆதி யான வான வாண ரண்ட கால நீயுரைத் [F]" (பாட்டு-8, அடி-3) 4 நாச மாகி நாளு லப்ப நன்மைசேர் பனங்கனிக் [5]" (80, 2) “ மாறு செய்த வான ரக்கன் நாளு லப்ப வன்றிலங் [கை]" (116, 1) என்ற பாசுரவடிகளினீற்றில் எழுத்தொன்று மிகுந்தும், பெறற்கரிய நின்ன பாத பத்தி யான பாசனம் (100) என்ற அடியின் முதலில் எழுத்தோசை குறைந்தும் வந்துள்ளமை காணலாம். யாப்பருங்கலவிருத்திகாரர் ஆரிடச்செய்யுட்டொடராகக் குறிப்பிட்ட பொய்கையார் வாக்குள்ளும் “ சோலைசூழ் குன்றெடுத்தாய் சொல் [ஓ]" “ இருந்தான் றிருநாம மெண் [ணு]" (முதற்றிருவந்தாதி, 69, 51.)