பக்கம்:ஆழ்வார்கள் காலநிலை.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

84 ஆழ்வார்கள் காலநிலை இம்மாறவர்மனது அரிய செய்தியாக ஒன்றையுங் குறிப்பிடாமற் பொதுப்படக் கூறிச்செல்கின்றது. இதனால், வெற்றிவேந்தனான தன் தந்தை கடுங் கோனுக்குப்பின் தான்பெற்ற நாட்டைச் சில்லாண்டுகள் ஆட்சி புரிந்து சென்றவனாகவே இவனைக் கருதல் தகும். அன்றியும், இவன் காலம், முதற்றொகுதியடியார் களுள் ஒருவரான திருமழிசைப்பிரானுக்கு உரிய தென்பது மேலே விளக்கப்பட்டது. இவற்றால், பெரியாழ் வாரால் அடிமைகொள்ளப்பெற்ற நெடுமாறன் இவனே என்று கருதற்குச் சிறப்பாக அமைந்த காரணம் ஒன்றுமேயில்லை. இனி, 4-ம் எண்ணுக்குரிய மாறவர்மன் திருஞான சம்பந்தர் காலத்தவனாவன், இவனே அந்நாயனாரால் சைனமதத்தினின்றும் திருப்பப்பெற்றுப் பரமசைவ னானவன், "நெல்வேலி வென்ற நின்றசீர் நெடுமாறன் என்று சிவனடியார்களுள் ஒருவனாகத் திருத்தொண்டத் தொகையிற் சுந்தரமூர்த்தி நாயனாராற் கூறப்பட்டவன் இவனே. இந்நெடுமாறன் நெல்வேலிவென்ற செய்தியை யும், சிவபத்தன் என்பதையும் தேவாரமும் சாஸனமுங் கூறியவாறே, இறையனார்களவியலுரையுட் கண்ட மேற்கோட் செய்யுட் களும்' ஆதரிக்கின்றன. 1. அவ்வுரையுள், 106, 145-ம் கட்டளைக் கலித் துறைகள் நெடுமாறனது நெல்வேலிப்போரையும், 256, 279-ம் கலித்துறைகள் அவனது சிவபத்தியையும் விளக்குதல் காண்க. இக்களவியலுரையிலுள்ள மற்றக் கட்டளைக் கலித்துறைகள் யாவும், இந்நெடுமாறனைப் பற்றி யனவேயாம், சென்னை மியூஸியம் கையெழுத்துப் புத்தகசாலையி லுள்ளதும், இறையனாரகப்பொருளுக்கு விளக்கமாக உதார ணப்பாடல் பல அமைத்துக் காட்டப்பட்டதுமான