பக்கம்:ஆழ்வார்கள் காலநிலை.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

பெரியாழ்வார் 83 இவ்வரசர்களுள் மாறவர்மன் என்ற இயற்பெயரு.ை.. யார்களை 2, 4, 6, 8-எண்களிற் காணலாம். இப்பெயரே இலக்கியசாஸனங்களில் முறையே மாறன், நெடுமாறன் என்றும் வழங்குவதாம்.! இம்மறவர்மர் மூவருள்ளே 2-ஆம் எண்ணுக் குரியவன், ஏழா நூற்றாண்டின் தொடக்கத்தில் இருந்தவன். ஏனைய பாண்டியரையெல்லாம் பல படி யாகவும் சிறப்பித்துக் கூறிவரும் வேள்விகுடிச்சாஸனம் 'பாண்டிய ராஜ்யம்' (The Pandyan Kingdom) என்ற நூலிற் காணப்படும் முறையோடு ஒத்தமைந்தது. 7, 8 எண் களுக்கு இடையில் இரண்டு தலைமுறைகளைக் கூட்டிக் கூறப் படுவதுண்டேனும், சாஸ்திரிகள் கருத்தே ஏற்புடையது என்பது அவர்கள் கட்டுரையை நுணுகியாராய்வார்க்கு விளங்கக் கூடியது.) 1. மாறன் என்பது பாண்டியார்க்குரிய பொதுர் பெயரேயாயினும், 7, 8ஆம் நூற்றாண்டிலிருந்த அவ்வரசர் சிலர், இதனைத் தம் இயற்பெயராகக் கொண்டிருந்தவர் என்பது சாஸனங்களால் தெளிவாகின்றது. இது, சாஸனங் களில் மாறவர்மன் என்றும், நூல்களில் மாறன், நெடு மாறன் என்றும் வழங்கும் (இறை. களவி, 38, 106, 142, 262, 278). இப்பெயர்போலவே சடையன் என்பதும் அக்காலத்துப் பெருவழங்குடையதாம். தந்தை மாறனும் மகன் சடையனுமாயின் மகனை மாறஞ்சடையன் என்றும், தந்தை சடையனும் மகன் மாறனுமாயின் பின்னவனைச் சடையமாறன் என்றும்-தந்தை பெயரை இணைத்துக் கூறும் பண்டை வழக்குப்படி-அவ்விரு பெயர்களும் பல தலைமுறை மாறிமாறிப் பாண்டியருள் வழங்கப்பட்டுள்ளன. இராச கேசரி, பரகேசரி என்ற பெயர்கள் தந்தைக்கும் மகனுக்கும் மாறிமாறிப் பல தலைமுறை வழங்கப்படுவதைச் சோழவர சருள்ளுங் காண்க.