பக்கம்:ஆழ்வார்கள் காலநிலை.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

82 ஆழ்வார்கள் காலநிலை நெடுமாறன் என்று பெயர் பெற்ற பாண்டியன் யாவன் என்பது ஆராய்ச்சிக்குரியதாகும். வேள்விகுடி சின்னமனூர்ச் சாஸனங்களால் 7-ம் நூற்றாண்டு முதல் 10-ம் நூற்றாண்டுவரை ஆட்சிபுரிந்த பாண்டியர்களின் பெயர்கள் நமக்குத் தொடர்ச்சியாகத் தெரியவருகின்றன. அதனுட் கண்ட அரசர் வமிசாவளி' அடியில் வருமாறு: 1. கடுங்கோன் 2. மாறவர்மன் அவனி சூளமாணி செழியன் சேந்தன் அரிகேசரி மாறவர்மன் (நெல்வேலி வென்ற நின்ற சீர் நெடுமாறன், திருஞான சம்பந்தர் காலத்தவன்.) S. கோச்சடையன் 6. மாறவர்மன், இராஜசிம்மன் (பல்லவ மல்லன் காலத் தவன்) 7, பராந்தகன், நெடுஞ்சடையன், ஜடிலவர்மன்; பரமவைஷ்ண வன் (கி. பி. 770.) 8. ஸ்ரீமாறன் ஸ்ரீவல்லபன் 9. வரகுணன் (கி. பி, 862-ல் 10, பராந்தக பட்ட மெய்தியவன்) வீரநாராயணன் 11. இராஜசிம்மன் (சோழன் பராந்தகன் 1. காலத்தவன்) 1. (ஈண்டுக்காட்டிய வமிசாவளி, ஸ்ரீமான் Prof. K. S. நீலகண்ட சாஸ்திரிகள் எழுதி வெளியிட்டுள்ள