பக்கம்:ஆழ்வார்கள் காலநிலை.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

81 பெரியாழ்வார் ஞானவிசேடத்தாலும் நாவன்மையாலும் வெற்றிபெற் றுப் பாண்டியனது பொற்கிழியைப் பெற்றதோடு, அவனையுந் தம் அடியவனாக்கினர் என்றும் கருதப் பெரிதும் பொருத்தமுண்டு. இனி, இவ்வாழ்வார்க்கு அடியவனான பாண்டியன் பெயர் ஸ்ரீ வல்லபதேவன் என்று குருபரம்பரைகள் கூறுகின்றன, ஆனால் ஆழ்வார் தம் திருமொழி 4-ம் பத்து 2-ம் பதிகத்துள், பாண்டியன் ஒருவனை அடியில் வரும் பாசுரத்தாற் சிறப்பித்தல் அறியத்தக்கது: “ மன்னர் மறுக மைத்துனன் மார்க்கொரு தேரின்மேல் முன்னங்குச் சென்று மோழை யெழுவித் தவன்மலை கொன்னவில் கூர்வேற் கோ நெடுமாறன் - தென் கூடற்கோன் தென்னன் கொண்டாடுந் தென்றிரு மாலிருஞ் சோலையே.” என்ற 7-ம் பாசுரத்தில், அப்பாண்டியனைக் கோ நெடுமாறன் என்று கூறுதல் காணலாம். கூடற் கோன், தென்னன்' என்பவற்றால், தாம் கூறப்புக்க அரசன் பாண்டியனே என்பதை ஆழ்வார் விளக்கிவிட்ட மையால், பின்னும் அவர் நெடுமாறன் என்றது, அவ னுக்குத் தங்காலத்துவழங்கிய பிரபலமான இயற் பெயரையே என்று கருதத் தடையில்லை. ஆயின், இந் 1, அச்சுப்பதிப்புக்களில் 'கோனேடுமாறன்' என்று றன்னகரமாக உள்ளதேனும், கோமாறன், கோச்சடையன் கோவரகுணன் என்று பாண்டியரும் பிறரும் விசேடிக்கப் படுமுறையே ஆழ்வாரும் பாடுதலால், 'கோகெடு மாறன் எனத் தந்நகரமாகவே கொள்க, இறையனார் களவியலில் வரும் பாண்டிக்கோவைப் பாடல்களிலும் (49, 257 otc.) இவ்வாறே கொள்ளற்பாலது.