பக்கம்:ஆழ்வார்கள் காலநிலை.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

80) ஆழ்வார்கள் காலநிலை மையை இந்த எட்டா நூற்றாண்டில் இழந்து விட்டன என்பதிற் சிறிதும் ஐயமில்லை. ஆனால், வைதிகப் பற்றுடையரான அரசர்கள், அப்புறமதங்களை வேரறுக்கும் கடுஞ் செற்றங் கொண் டிருந்தவரல்லர். அதனால், அவ்வெட்டாம் நூற்றாண் டினும் அதன் பின்பும் அம்மதத்தவர்கள் வாதப்போர் புரிந்து தத்தங் கொள்கைகளைப் பரப்பும் முயற்சிக்கு யாதொரு தடையும் இருந்ததில்லை எனலாம். இந்நிலைமையோடு கூடிய 8-ம் நூற்றாண்டே, பெரியாழ்வார் வாழ்ந்த காலவிசேடமுமாகும், இவ்வாழ் வார் நடத்தியதாகக் கூறும் சமயவாதம், பெரும் பான்மையும் வைதிக மதத்தவர்க்குள் நிகழ்ந்ததாகக் கொள்ளற்குரியதே யன்றிப் புறச்சமயிகளுடன் அன்று. தமிழகத்தில் தலைமை பெற்றோங்கிய பல்லவர்கள் திருமால்பத்திமையிற் சிறந்து நின்றது இந் நூற்றாண் டின் கண்ணே யாதலாலும், இவ்வாழ்வாரே கூறிய வாறு, பத்தர்களும் பகவர்களும்” பலராக இக்காலத்து விளங்கினமையாலும், ஏற்கனவே சைனரைவென்று நாட்டில் ஆதிக்கம் பெற்றிருந்த சைவர்க்கு, வைணவசமயிகளிடம் மனவெறுப்பு உண்டாயிருத் தலும், அதுபற்றிப் பரத்துவம் பற்றிய வாதம் அவ் விருவர்க்குள் நிகழ்ந்திருத்தலும் கூடியனவே. இக்காலத்தில், தமிழ்நாட்டின் வடபகுதியை ஆண்ட பல்லவர் திருமாலடிமையிற் சிறந்திறந்தவ ராயினும், தென்பகுதியை ஆட்சிபுரிந்த பாண்டியர் பரம்பரையே சிவபத்தியில் தலை சிறந்தவர்கள். அதனால், அவ்வாதம் தென்னாட்டில் ஏற்படலாயிற் றென்றும், அதனில் பெரியாழ்வார் தம் நிரதிசயமான