பக்கம்:ஆழ்வார்கள் காலநிலை.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

பெரியாழ்வார் 89 தன் முன்னோரைப்போலவே இம்மந்திரியும் வைஷ் ணவன் என்பது, இவனெழுதிய அச்சாஸனப் போக்கால் தெளிவாம். இங்ஙனம் பாண்டினொருவனும், அவன் தலைமை மந்திரிகளும் திருமாலடிமைத்திறத்திற் சிறந்த வராக விளங்கியது பாண்டியவமிசத்தில் மிகவும் அருமையேயாகும். இதுபற்றியே "பரம வைஷ்ணவன் தானாகி நின்றிலங்கும்” என்று, அச்சாஸனம் பாடிய கவியும் வியப்பவன்போலவே தோற்றுகின்றான். பரம்பரைச் சைவரான பாண்டியகுலத்தில், இத்தகைய நிலைமையொன்று இடைப் புகுந்ததெனின், அதற்கு ஏதோ ஒரு விசேடசம்பவம் காரணமாக வேண்டுமன்றோ? அந்தச் சம்பவம் பெரியாழ்வாரால் உண்டாக்கப் பெற்றதாகவே கருதத்தகும். இவ்வாழ்வா ரால் தம் காலத்துத் திருமாலடியவனாகக் குறிக்கப் பட்டவன், நெடுமாறன் என்ற பெயரினன் என்பது மேலே விளக்கப்பட்டது. பரமவைஷ்ணவனாகச் சீவரமங்கல சாஸனங் கூறும் பாண்டியனுக்கு நெடுஞ்சடையன் அல்லது சடையன் என்பது பெயரேயன்றி நெடுமாறன் என்பதன்று. இவனை மாறஞ் சடையன் என்றும் சாஸனங்கள் வழங்குவ துண்டு. தந்தை பெயரை இயற்பெயருடன் இணைத்துக் கூறும் பண்டை வழக்குப்படி, மாறனுக்கு மகன் சடையன் என்பது இதன் பொருளாம். ஆகவே, ஆழ்வாரால் திருமாலடியவனாகக் கூறப் பட்ட பாண்டியன், தந்தையாகிய மாறன் அல்லது உரியனவாக க்ஷ சாஸனங் கூறுதல் காண்க. இவனுக்கு வழங்கும் பெயரால், அம்மாறங்காரியின் சகோதரனான மாறனெயினனுக்கு மகனாக இவனைக்கொள்ள இடமுண்டு.