பக்கம்:இக்பால் இலக்கியமும் வாழ்வும்.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இலெனின் கனவில் இறைவன்

இலெனின் :

உயிர்களின் இடையிலுன் ஆற்றலை உணர்ந்தோம்,
எங்கும் இருப்பவன், என்றும் உளன்நீ,
எனினும் அதைநான் எங்ங்ணம் அறிவேன்?
இன்றுனைக் கண்களால் நன்கு காண்கின்றேன்.
யாருக்கிறைவன் நீ?

அறிவும் கல்வியும் ஆற்றலும் திறமையும்
மாலைப்போதில் மதுவின் மயக்கால்
கோலச் செந்நிறம் கால்கொளும் விழிகளில்
உயிரை உறிஞ்சியே பொதுமை பேசிடும்
வல்லமையாளன் நீ நல்லறத் தலைவன் நீ
எனினும் உன் உலகில்
தொழிலாளியின் துயர்க்கெல்லை இல்லையே.

முதலாளியக் கப்பல் அழிவதென்றோ?
உன்றன் உலகம்
விடுதலை நாளே வேண்டித் தவித்திடும்
மீட்சி நாட்குக் காத்திருக்கின்றது.

உரிமைக்காக உள்ளங் குமுறுவர்
கணக்கும் பிணக்கும் தீர்க்கும் நாள் என்றோ?

அரமகளிர் :

நல்லறிவின்னும் கட்டுண்டுள்ளது.
அன்பும் உரிமையும்
மாந்தர் அனைவர்க்கும் மல்கிடவில்லை.
உலகப் படைப்பின் கலைஞ,

114