பக்கம்:இக்பால் இலக்கியமும் வாழ்வும்.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

' உலகம் அனைத்திலும் சிறந்தது.

எங்கள் ஹிந்துஸ்தானம் ! - எங்களுடையது இப்பூங்கா! நாங்கள் அதன் புல்புல் பறவைகள்'

என்னும் இந்தப் பாடல் பாரதத்தின் மூலமுடுக்கெல்லாம் அன்றும் இன்றும் என்றும் ஒலிக்கும் பாடலாகும். அடிமை யெனும் விலங்கு அகற்றி அன்னைதனே அரியணையில் அமர்த் திய நேரத்தில், அரசியல் நிர்ணய சபையின் தொடக்கத்தில் பாடப்பட்ட பாடல் யாரே ஜஹா(ன்) ஸே அச்சா(ஹ்) இக்பால் என்னும் வானம்பாடியின் இதய கீதம் இப் பாடல்: பாரத விடுதலையின் உதய கீதம் இது !

யார் இந்த இக்பால் ? உலக மகாகவியெனப் பிரபஞ்சமே போற்றிய மாமேதை அவர் மாபெரும் கவிஞர்; பேராசி 'ரியர்; பன்மொழிப் புலவர்; அரசியல்வாதி. தத்துவஞானி; எல்லாவற்றுக்கும் மேலாகத் தன்னையே உணரும் தத்துவத்தை உலகில் பரப்பியவர்; மனிதாபிமானம் மிக்க உயர் மானுடர்! என் முன்னேர் பிராம்மணர்கள்; அவர்கள் கடவுளைத் தேடினர்கள்; நானே மனிதனத் தேடுகிறேன் ” என்று கூறியவர் இக்பால். முழுமையான மனிதனைக் காண்பதே அவர் வேட்கை,

பிளவு படாத இந்தியாவின் பஞ்சாப் பகுதியில் உள்ள லியால்கோட் நகரில், ! நீங்கள் இப் பூங்காவின் காவலர் கள்; இதன் பிளவு போக வழி தேடுங்கள் ' என்று பண் பாடிய இக்பால் பிறந்தார். தந்தையார் பெயர் ஷேக் நூர் முகம்மது. இமாம் பீபீ தயார். 1877 நவம்பர் 9-ஆம் நாள் பிறந்தார் இக்பால் என்பர். எனினும் அவர் பிறந்த நாள் குறித்து உறுதியான சான்றேதும் கிடைக்கவில்லை. இக்

135