பக்கம்:இக்பால் இலக்கியமும் வாழ்வும்.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாலுக்கு இல்லத்தார் சூட்டிய பெயர் ஷேக் முஹம்மது இக்பால். இக்பால் என்பதன் பொருள் புகழ் அன்ருே!

கவித்துவம் அவரோடு பிறந்த ஒன்று. இளம் வயதிலேயே உன்னதமான கவிதைகனப் பாடினர் இக்பால். 17 வயதி லேயே புகழ்மிக்க கவிஞராஞர். பஞ்சாபின் எல்லாப் பகுதி களும் அறிந்த கவிஞராக இக்பால் திகழ்ந்தார். அவர் கலந்து கொள்ளாத பெரிய முஷைராக்கள் :எதுவும் இல்லை. ஷ்காட் டிஷ் மிஷன் பள்ளியில் உயர்நிலைக் கல்வி பெற்ற இக்பால் லாகூரில் உள்ள கல்லூரியில் எம். ஏ. பட்டம் பெற்ருர்.

இஸ்லாமிய கலாசாரத்திலும் தத்துவத்திலும் தேர்ச்சிபெற்ற டி. டபிள்யூ. ஆர்ணுல்டு என்னும் பேராசிரியரின் தொடர்பு அவருக்கு அங்கு ஏற்பட்டது.

எம். ஏ. பட்டம் பெற்ற இக்பால் மேற்படிப்பிற்காக இங்கி லாந்து சென்ருர். 1905-இல் மேடுைசென்ற இக்பால்,கேம்ப்ரிஜ் டிரினிடி கல்லூரியில் பிஎச்.டி. பட்டம் பெற்ருர், மியூனிக் பல்கலைக் கழகமும் டாக்டர் ஆப் ஃபிலாசபி என்னும் சிறப்பை அளித்தது. இலண்டனில் தங்கியிருக்கையில் பாரிஸ்டர் பட்ட மும் பெற்ருர். இலண்டன் பல்கலைக் கழகத்தில் அரபி மொழிப் பேராசிரியராக இக்பால் பணியாற்றினர். அரபி, பஞ்சாபி, உர்து, பாரசீகம், சம்ஸ்கிருதம் ஆகிய கீழ்த்திசை மொழிகளை அறிந்த இக்பால், ஜெர்மன், இலத்தின் ஆகிய மொழிகளைக் அங்குக் கற்ருர் . மூன் ருண்டுக்ள் வெளிநாட்டில் தங்கி விட்டு 1908-ஆம் ஆண்டில் இந்தியாவிற்கு இக்பால் திரும்பி வந்தார். -

மேலே நாகரிகத்தின் நிலைமைகளைக் கண்டறிந்த இக்பால் இந்தியா திரும்பியதும் இங்கு நிலவும் சூழ்நிலையைக் கண்டு மனம் வெதும்பினர்.

!

3.

6