உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இங்கிலாந்தில் சில மாதங்கள்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

46

கடல் பிரிக்கிறது. கடற் பயணத்தில் அடுத்த கரையை அடைந்தோம். குவிந்த வானம், பரந்த கடல், அதில் மிதந்து செல்லும் கப்பல் பக்கத்தில் நம்மோடு பயணம் செய்யும் பல தேசத்து மக்கள். சைனாக்காரர்கள் எப்பொழுதும் ‘காமிரா’ கையிலே வைத்திருப்பார்கள். அவ்வப்பொழுது காண்பவற்றை எல்லாம் பதிவு செய்து கொள்கிறார்கள். அமெரிக்கர்களும் முக்கியமான காட்சிகளை நிழழ்படம் எடுத்துக்கொண்டே இருக்கிறார்கள். அங்கு மது வகைகள் உணவு வகைகள் அவர்களுக்கு வாய்ச் சுவையைத் தருகின்றன.

ஹோட்டல்களில் தண்ணீர் குடிப்பவரை ஐரோப்பா முழுவதும் காணமுடியாது; நம்மைப் போன்றவர்கள் இங்கு ஏற்பட்ட பழக்கத்தின் காரணமாகத் தண்ணீர் குடிப்பதற்கு அங்கு வெட்கப்பட வேண்டியுள்ளது. எங்காவது வெளியே சென்றால் பாட்டில்களில் தண்ணீர் கொண்டு செல்வது எங்களுக்குப் பழக்கம். அதை அவர்கள் பார்க்கும்போது அது ஒரு வியப்பான காட்சியாகத்தான் இருக்கும். போயும் போயும் தண்ணீரையா குடிப்பார்கள். இவர்கள் மிகவும் ஏழைகளாகத்தான் இருக்க வேண்டும். ‘பீர்’ குடிக்கும் நாவுக்குத் தண்ணீர் ஏற்காது. தேவைப்பட்டால் கொக்கோ கோலா, டின்களில் அடைக்கப்பட்டிருக்கும் பழச் சாறுகள் விற்கப்படுகின்றன. மதுபானம் பழகாதவர்கள் இந்த ரசங்களைப் பருகுவார்களே தவிர வெறும் தண்ணீரைக் குடிப்பது இல்லை. எங்களுக்கும் அந்தப் பழக்கம் நாளடைவில் ஏற்பட்டுவிட்டது . குடிப்பழக்கம் அல்ல; ஏனைய ரசங்களைக் குடித்து நீர் வேட்கையைத் தணித்துக் கொள்ளும் பழக்கம்.

எங்களோடு தமிழ் நாட்டு ஐ. ஏ. எஸ். குடும்பத்தினர் ஒருவர் வந்திருந்தார். அவர்கள் எங்களுக்குப் பேச்சுத் துணைக்கு உதவினர். அவர்கள் பலமுறை அந்தப் பக்கம் பார்த்து வந்தவர்கள். பழகியவர்கள்; விடுமுறை என்றால்