பக்கம்:இங்கிலாந்தில் சில மாதங்கள்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

67

ஜெர்மனியில் முக்கியமாக நாம் செல்லும் பகுதிகள் எல்லாம் ‘ரைன்’ நதி நம்மைத் தொடர்கிறது; வழியெல்யெல்லாம் திராட்சைக் கொடிகள்; எங்கும் பசுமை: இப்படியே ஏறக்குறைய பெல்ஜியம் ஹாலந்துப் பகுதிகள் காட்சி அளித்தன. நல்ல மழை. இயற்கை அவர்களுக்கு வளத்தை வாரித் தருகிறது, மண் இரும்பையும் கரியையும் தோண்டும் அளவிற்குத் தந்துகொண்டிருக்கிறது. தொழில் நீண்டகாலமாக வளர்க்கப்பட்டு இருக்கிறது. நாம் ஒரு பொருளை உற்பத்தி செய்வது என்றால் அதற்கு அடிப்படை அச்சுகள் நிறுவவேண்டும். கார் உற்பத்தி என்றால் அதற்கு வேண்டிய அச்சுகள் (plants} தேவைப்படுகின்றன. இவ்வாறே ஒவ்வொரு தொழிலுக்கும் அடிப்படை அச்சுகள் வேண்டும். அவர்கள் ஏற்கனவே இத்துறைகளில் முன்னோடிகளாக இருப்பதால் நிறைய எந்திரங்களைக் கார்களை உற்பத்தி செய்யும் வசதி வாய்ப்புகள் பெற்றிருக்கின்றனர்.

நாம் ஒரே ஒரு துறையில் மேல்நாட்டை ஒட்டி மிக வேகமாக முன்னேறி வருகிறோம். திரைப்படத் துறையில், அவர்கள் விமானங்கள் ஹெலிகாப்டர்களில் சண்டை போடுகிறார்கள். நாம் துப்பாக்கி வெடிகுண்டு வரை வந்துவிட்டோம். இந்தப் படங்கள் இப்பொழுது வன்முறை கொள்ளைகள் செய்யத் தூண்டுதலாக இருக்கின்றன என்று எண்ணாமல் இருக்க முடியவில்லை. ‘நூறாவது நாள்’ படம் பார்த்துவிட்டு எப்படிக் கொலை செய்வது என்று கற்றுக்கொண்டு அதே வகையான வெறித்தனத்தோடு குடும்பத்தையே அழித்தான் ஓர் இளைஞன். அது அவன் தந்த வாக்குமூலம். மேல் நாட்டுத் திரைப்படங்களை ஒட்டி இங்கும் சண்டைக் காட்சிகள் மிகுதிப்படுத்தப்படுகின்றன. விளைவு: இன்றைய இளைஞர்களின் மனோ நிலை; காந்தியுகம் மாறிச் சட்ட மீறல்கள் வளர்கின்றன.

நாம் மற்ற துறைகளில் அவர்களை ஒட்டி வளரவேண்டும் என்பதற்காகத்தான் இதைக் குறிப்பிடவேண்டி