பக்கம்:இங்கே ஸ்ரீராமன் தீக்குளிக்கிறான்.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

91

"ராத்திரி நீங்க நிம்மதியாய்த் தூங்கலே போலே" என்று மெல்லிய குரலில் கேட்டாள் ஊர்வசி.

இரவு பூராவும் நிம்மதி இழந்து தவித்துப் படுக்கையில் புரண்டு கொண்டிருந்ததை அவன் எண்ணிப் பார்த்தான். இரவு பன்னிரண்டரை மணியிலிருந்து விடிகாலை நான்கு மணி மட்டும் அ வ ன் தூக்கம் பிடிக்காமல் தவித்த தவிப்பை அவன்தான் அறிவான் . இப்போது அத்தவிப்பை அவளும் அறிந்திருந்தாளோ ?

"நான் நிம்மதியாய்த்தான் தூங்கினேன். நீங்க ... நீ நல்லாத் தூங்கினே, இல்லையா ?”

“நான் நல்லாத் தூங்கினேன்னுதான் முன்னமேயே சொல்லிட்டேனுங்களே!”

அன்றையப் புதுப் பத்திரிகையைப் புரட்டிக் கொண் டிருந்தான் அம்பலத்தரசன்.

ரேடியோவை 'ட்யூன்' பண்ணிக் கொண்டிருந்தாள் ஊர்வசி. பூகரங்களில் இழைந்த தங்க வளையல்கள் நயம் சேர்த்துக் குலுங்கின.

“அப்புறம் உன் திட்டம் என்ன, ஊர்வசி?"

மேஜையின் அடித்தளத்தில் தன்னுடைய எழிலார்ந்த நெஞ்சைப் பதித்து ரேடியோவைக் கேட்டுக் கொண்டி ருந்தவள். எழுந்து அவனைப் பார்த்துக் கொண்டே, “என்னையே உங்ககிட்டே நான் ஒப்படைச்சிட்ட பிற் பாடு, தனியே பிரிச்சு என்கிட்டே என்னோட திட்டத் தைப் பத்திக் கேட்கிறீங்களே" என்று சொன்னாள்.

'நீ சொல்றது. மெய்தான். அதற்காகச் சொல்லலே.

மேற்கொண்டு என்ன நடக்க வேணுமிங்கறதைப் பற்றி நான் தெரிஞ்சுக்க வேணுமில்லையா, அதுக்காகவே கேட்டேன்" என்று தன் கேள்விக்கு விளக்கத்தை எடுத்துக் காட்டினான் அம்பலத்தரசன்.