பக்கம்:இங்கே ஸ்ரீராமன் தீக்குளிக்கிறான்.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

106


ஊர்வசி விரக்தியோடும் அச்சத்தோடும் தன் அன்னை யைப் பரிதாபமாகப் பார்த்தாள்.

பாவி ஒருத்தன் என்னைப் பலாத்காரம் பண்ணிக் கெடுத்திட்டானம்மா ! என்னை நான் காப்பாத்திக்கிட எத்தனை முயற்சி செஞ்சும், விதி அலனுக்குச் சாதகமாக இருந்திடுச்சம்மா! என்னைத் தெய்வம் ஏமாத்திடுச்சம்மா” என்று கூக்குரல் பரப்பினாள் ஊர்வசி. பெற்றவளின் பாதங்களைச் சரணடைந்து கதறினாள். -

ஐயையோ! தெய்வமே!’

அலறினாள் மீனாட்சி அம்மாள். மண்டையில் ஓங்கி ஓங்கி அடித்துக் கொண்டாள் அம் முதியவள். மாளாத விழிநீர் வழிந்தது. தளர்ந்திருந்த உடல் அல்லாடியது.

பூகம்பம் வெடித்ததோ ?

“அடிப்பாவி என்னை உசிரோட கொன்னுட்டியே ? கெட்ட கழுசடை அங்கிட்டே போய்க் கடலிலே விழுந்து சாகாமல் ஏன் எங்கண்ணிலே வந்து விழிச்சே ?’ என்று நல்ல பாம்பாய் மீனாட்சி அம்மாள் சீறினாள்.

“அப்படிச் .ெ ச த் து ப் போயிடுறது. இப்போதும் எனக்குச் சுலபம்தானம்மா ! ஆனா, அப்படி நான் செத் திட்டா மாத்திரம், எனக்கு உண்டான அவப் பேரும், களங்கமும் மறைஞ்சிடுமா அ ம் மா ? இதுக்கு விடை சொல்லிடு. இப்பவே போய் நான் கடலிலே விழுந்து செத்துப் போயிடுறேன் ! ஆண்டவன் அதுக்கு உண்டான தைரியத்தைக் கொடுத்திருக்கான் ! உன்னோட அன்பும் கண்டிப்பும் அதுக்கு உண்டான மனசைக் கொடுத்திருக்கு சொல்லம்மா, சொல்லு’ என்று விரக்தியின் அழுத்தத் தோடு - நெஞ்சுரத்தின் - வலுவோடு நேர்மைத் திறனில் தனக்குள்ள ஈடு பாட்டின் துணையோடு அவள் வினா விடுத்தாள்.