பக்கம்:இங்கே ஸ்ரீராமன் தீக்குளிக்கிறான்.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

145


இதோ பார், இதுதான் என் சம்சாரம்! கொஞ்ச முந்தித் தான் என்னோட பழைய அந்தரங்க விளையாட்டைப் பத்திச் சொன்னேன் இதுகிட்டே! என். பேச்சுக்குச் சாட்சி சொல்ல நீ இங்கே இருந்திட்டே! இனிமே நான் பாவியல்ல!

மங்கையர்க்கரசி கண்களை உயர்த்தி அம்பலத்தர சனையும் ஊர்வசியையும் பார்த்தாள்.

"ரொம்பக் கொடுத்து வச்ச பொண்ணு இது"என்றாள்.

"அதாலேதானே அதை நான் எடுத்துக்கிட்டேன்.

"தங்கச்சியோட பேர் ?"

“ஊர்வஇ!

“அப்படியா? ரொம்ப நல்லாக் கவனிச்சிது இது.உங் களுக்கு வேண்டப்பட்டவன்னு மாத்திரம்தான் நான் சொன்னேன் அதுகிட்டே. ஆனா, இப்போ இந்தப் பாவி யோட கதை தெரிஞ்சப்புறம், என்னை அது முன்னை மாதிரி நேசிக்குமோ, என்னவோ" என்று வருந்தினாள் மங்கையர்க்கரசி.

"அப்படிச் சொல்லாதீங்க. உங்களை எப்பவுமே நேசிக்கத் த வ ற மா ட் டே ன், அக்கா எனக்கு பகவான் கொடுத்த சீதனம் இந்த மனசுதான். இந்த மனசிலே உங் களுக்கும் இடமுண்டு, பகவான் சோதிச்சுப் பழகிறத்துக்கு தான் நாம் பிறந்திருக்கோம். உங்களுக்கு ஏற்பட்ட சோதனை ஒரு மாதிரி, ஆனா, எனக்கு ஏ ற் ப ட் ட சோதனையை நீங்க அறிஞ்சா, மனசு வெடிச்சுப் போய்டு வீங்க. அப்புறம் கேளுங்க, என் அத்தானை அவங்க சொல் லுவாங்க கதையை-ஆமா, கதையை!"

இ - 10