உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இங்கே ஸ்ரீராமன் தீக்குளிக்கிறான்.pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

169


திருச்சு ! உங்க விமர்சனம் மூலம் என் நடிப்புக்கு ஒரு மவுஸ் பிறந்திட்டுதுங்க. புதுசா ஒரு சினிமா பார்ட்டி எங் கிட்டே மூவ் பண்ணியிருக்காங்க !’

“அப்படியா கங்க்ராச்சுலேஷன்ஸ் !’ ‘பேச்சு வார்த்தை முடியட்டும். ஆனா எங்க அப்பாருக்குத் தான் இதிலே துளியும் விருப்பம் இல்லை. நான் கெட்டுப் போயிடுவேன் என்று பயப்படுறாங்க ‘

“ஓஹோ !”

ஊர்வசியைப் பற்றின நாடக விமர்சனம் எப்படி இருந்திச்சுங்க, பூமிநாதன் ?” .

“மிஸ் ஊர்வசியைப் பற்றித்தான் ஸ்பெஷலாக எழுதி யிருந்தீங்களே ! ஒரு விஷயத்தைச் சொல்லனும் கற்பழிக்கப் பட்ட கதாநாயகிக்கு சமூகம் ஆதரவு தர வேணும்னு நீங்க கதாசிரியருக்கு அட்வைஸ் பண்ணியிருந்ததை நானும் வரவேற்கிறேனுங்க, அம்பலத்தரசன் ! கெடுக்கப்பட்ட கதாநாயகிக்கு கடல் அடைக்கலம் தந்ததாய் காட்டின முடிவை ஒத்திகையிலே நான் பாராட்டினேன் ; ஆனா இப்போ அந்த முடிவு அர்த்தமற்றதாகத்தான் தோணுது எனக்கு ஆதரவு இழந்த அபலைப் பெண்களுக்கு இப்படிப் பட்ட மோசடிகளுக்குத் தங்களையும் மீறி ஆளாகிற அல்லது ஆளாக்கப்படுகிற அபலைப் பெண்களுக்கு இந்த தமிழ்ச் சமுதாயம் ஈவிரக்கம் காட்டி அவர்களையும் வாழ வைப்பதிலே தான் தமிழ்ப்பண்பாடு செழிக்க முடியும் என்கிற உங்க வாதத்தை நான் மனப்பூர்வமாய் ஆதரிக் கிறேனுங்க. இம்மாதிரியான ஒரு கடமைக்கு எப்போதுமே நான் தயாராகவும் இருப்பேனுங்க!’

“நிஜமாகவா, மிஸ்டர் பூமிநாதன் ?”

“நிஜமாகத்தான் !” சத்தியமாகவா ?”

சத்தியமாகத்தான் அம்பலத்தரசன் !’

இ - 12