பக்கம்:இங்கே ஸ்ரீராமன் தீக்குளிக்கிறான்.pdf/182

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

172


“உட்கார்’ என்று குறித்தான் அம்பலத்தரசன். அவள் பாங்குடன் குந்தினாள், அவளைப் பார்த்துவிட்டு, பூமிநாதனையும் அதே பார்வை'யின் பார்த்தான் அம்பலத்தரசன். அப்போது அவன் நெஞ்சில் பூமிநாதனின் ரத்தம் மண்டிய அந்த மார்புத் தழும்பு விளையாடியது!

மறுகணம், பூமிநாதன் தன்னைத்தானே குனிந்து பார்த்துக் கொண்டு சட்டையின் பொத்தான்களை வாகு பார்த்துப் பொருத்திக் கொண்டிருந்தான்.

‘பூவை எடுத்துக் கொள்ளலாமா நான்?’ என்று உரிமை பூண்டு அம்பலத்தரசனை வினவிய காட்சி பூமிநாதனுக்கு மட்டில்லாத மயக்கத்தைக் கொடுத்திருக் கும் போலும் விரிந்த கண்கள் விரிய, சிலிர்த்த இதழ்கள் சிலிர்க்க, அவன் அம்பலத்தரசனையும் ஊர்வசியையும் மாறி மாறிப் பார்த்தான்.

‘ஆஹா!’ என்று அம்பலத்தரசன் ஓரிரு கணங்கள் கழித்துதான் விடை கொடுத்தான்.

அதற்குள் பூ, பூவையை நாடியது. பூவோடு பூ சேர்ந்தது; மனத்தோடு மனம் கூடியது.

க்ரிட்டிக் ஸார், நீங்க எங்க வீட்டுக்கு இப்போது சாப்

பாட்டுக்கு வரவேணும்! வில்லன் ஸார், நீங்களும் எங்க வீட்டு விருந்துக்கு வரவேணும்! அவங்க விமர்சனம் எழு தினவங்க. நீங்க எனக்கு வில்லனாக நடிச்சவங்க!”

அம்பலத்தரசன் மீதிருந்த தன் ஒரக் கண் பார்வையை நயமுடன் திருப்பி பூமிநாதனை உன்னிப்பாகப் பார்த்துச் சொன்னாள் அவள். * . . . .

“விருந்துக்கு வர்ாமல் இருக்க முடிமா? பேஷாக வரு கிறேன் என்றான் அம்பலத்தரசன்.