பக்கம்:இங்கே ஸ்ரீராமன் தீக்குளிக்கிறான்.pdf/191

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

181


உன் தண்டனையை எனக்குக் கொடுத்திடு அந்தத் தண்டனை இந்தத் துரோகியை - பாவியை-மிருகத்தைக் கடைத்தேறச் செய்யட்டும் ‘ என்று ஒங்காரமிட்டுக் சிதறிய வண்ணம் மறுபடியும் ஊர்வசியின் பாதங்களில் சிரம் பதித்துக் கூக்குரலிட்டு அழுதான் பூமிநாதன், அவன் நினைவு சிறுகச் சிறுக மாறிக்கொண்டிருந்தது.

வெஞ்சினம் மூள, எச்சில் கையுடன் எழுத்தான், அம்பலத்தரசன்,

அவனை முந்திக்கொண்டு, ஊர்வசியின் அன்னை, பூமிநாதனின் தலைமுடியை வெறி மூளப் பற்றினாள் ; பாழ் நெற்றியில் பழிவாங்கும் வைராக்கியம் தவம் இருந்தது.

அன்னையைத் தடுத்தாள் புதல்வி, பூமிநாதனின் கன்னங்களில் அறையக் கையை ஓங்கிய அம்பலத்தரசனையும் கரம் பற்றித் தடுத்தாள் ஊர்வசி

‘தெய்வம் விளையாடுதுங்க, அத்தான்! தர்மம் விளை யாடுதுங்க, அம்மா நீங்க ரெண்டுபேரும் எனக்குக் கண் கண்ட தெய்வங்கள்!. தயவு செஞ்சு நீங்க ரெண்டு பேரும் அமைதியாயிருங்க. கையெடுத்து கும்பிடுகிறேன்’ என்று நைந்த குரலெடுத்துப் பேசிவிட்டு, தன்னை மறந்து, விம்மி வெடித்துக் கொண்டிருந்தாள் ஊர்வசி. அவள் வர்ஷித்த விழி வெள்ளம் பூமிநாதனின் தலையில் வழிந்து கொண்டே இருந்தது. . -

கணங்கள் பேய்க் கணங்களாக ஊர்ந்தன, அம்பலத்தரசனும் மீனாட்சி அம்மாளும் சிலையாக நின்றனர். - - - - - -

சுயப் பிரக்ஞை கொண்டான் ஊர்வசி; வழிந்த கண்ணிர் வழிந்தோட, பூமிநாதனை நோக்கினாள். பூமிநாதன் சுயப் பிரக்ஞை தப்பிக்கிடந்தான்