பக்கம்:இங்கே ஸ்ரீராமன் தீக்குளிக்கிறான்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

23


உணர்ச்சி வசப்பட்ட நிலையிலேயே, தலையைத் தூக்கி எழுந்தாள் தெய்வானை; நெற்றித் திலகத்தில் ரத்தத்துளிகள் கலந்து கரைத்தன. கன்னங்களின் தழும் புகள் கரையாமல் கரைந்தன.

“ஆத்தாளே! நீதான் வெறும் செம்பாரங் கல்லாகிப் பூட்டியே ? அதனாலேதான் நானும் கல்லாகிப் போயிட் டேன் ! ஒனக்குத் தெரியாத கதையா, காரணமா ? மறு தக்கமும் நினைப்பூட்டுறேன். கேட்டுக்க என்னோட மனசான மனசை தொடுறதுக்கு லாயக்கு இல்லாமபோன மேலத் தெரு வேலாயுதம் நல்லவனாட்டம் நடிக்க குடி வெறியிலே என்னோட மேனியைத் தொட்டதாலேதான், நான் அந்த ஆம்பளைச் சிங்கத்துக்கு எந்தலையைக் கொடுத்து, அந்த மிருகத்தையும் ஒரு நல்ல மனுசனாக ஆக்கிப்பிடலாம்னு கனாக்கண்டு, அந்தப் புறம்போக்கு ஆளுக்கு வாழ்க்கைப்படவும் துணிஞ்சேன் ஆனா எனக்கு நல்ல தாலிப் பொசிப்பு நல்லபடியாகவும் நல்லதனமாகவும் வாய்க்கலே, வாய்க்கவே இல்லே! ஊர் உலகத்தையெல்லாம் கல்லாக இருந்துக்கிட்டே ஆளுற ஆத்தாளான ஒனக்கு, ஒன்னோட அருமைக்குஞ்சான என் பேரிலே ஈவிரக்கம் ஏற்படாமலேயே பூடுச்சு. எனக்கு மச்சானாகப் புதுப் பெருமையை வலுக்கட்டாயத்தின் பேரிலே சூட்டிக்கிட்ட அந்த வேட்டி கட்டின ஆம்பளைக்கு தன் தப்புப் புரி யாமலே பூடுச்சு. என் அருமையும் விளங்காமல் பூடுச்சு. இதுதான் என்னோட விதின்னு சொல்லுறியாக்கும் ? அப்படின்னா சரி என் விதியை நான் பார்த்துக்கிடுவேன்! சவால் விட்டு சமாளிச்சுக்குடுவேன். ஆமா, சொல்லிப் புட்டேன். நல்லா கேட்டுக்கிட்டியா, ஆத்தாளே ?”

வெறிபிடித்தவளாக ஓடினாள் தெய்வானை

அம்மன் சந்நிதானத்தைக் குறி வைத்து, வீறு கொண்டு ஓடினாள் தெய்வானை !