பக்கம்:இங்கே ஸ்ரீராமன் தீக்குளிக்கிறான்.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன் உரை; என் உரை:

வாழ்க்கை என்பது சத்தியச் சோதனை - சத்தியம் சோதிக்கும் போதும், அந்தச் சத்தியம் சோதிக்கப்படும் போதும் தான், வாழ்க்கை வாழ்வாங்கு வாழும் வாழ்க் கையாக அமையும்; அ ைம ய முடியும் ; அமையவும் வேண்டும் !

வாழ்க்கை என்றால், சோதனை சோதனை என்றால், வாழ்க்கை ! வாழ்க்கையின் சோதனையிலே, அல்லது, சோதனையின் வாழ்க்கையிலேதான், பொய்யான இம் மண்ணில் மெய்யாகப் பிறந்தவர்கள் ஆண்-பெண் அடங்கலாக விளையாடுகிறார்கள்; விளையாட்டுக் காட்டு கிறார்கள். இவ்விளையாட்டு, மனிதர்களின் விதியாக மட்டுமல்லாமல் விதியின் மனிதர்களாக இவர்கள் மாறவும் மாற்றப்படவும் வேண்டிய சோதனைகள் சூடு பிடிக்கவும் தலைப்படுகின்றன ! - அந்தச் சோதனையின் வெற்றி - தோல்வியிலேதான், வாழ்க்கையின் விதி - தலைவிதியும் நிர்ணயம் ஆகிறது ; நிர்ணயிக்கப்படுகிறது ! - இந்நிலை யின் முடிவிலேதான், வாழ்க்கையின் ஐந்தொகைக் கணக்கும் சரிபார்க்கப்படுகிறது !

வேடிக்கைதான் ! வாழ்க்கையே ஒரு வேடிக்கைதான் ! இந்த வேடிக்கைதான் வாழ்க்கை ! நல்ல வேடிக்கைதான், அப்பனே ! அம்மையப்பனே!

3:ή :

வாழ்க்கை வெறும் சோதனை , மட்டிலுந்தானா ?

ஊகூம் !

வாழ்க்கையே ஒரு கதையும் -ಹಹTಿ !