பக்கம்:இசைத்தமிழ்.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. இசைக்கருவிகள் இசையுருவங்களைப் பிறழாது வளர்ப்பன இசைக் கருவிகள். அவை தோற்கருவி. துளைக்கருவி, நரப்புக் கருவி, கஞ்சக்கருவி என்பன, இந்நால்வகை இசைக்கருவி களும் திருக்கோயில் வழிபாடுகளில் சிறப்பாக இடம் பெற்றிருந்த செய்தி தேவாரத் திருப்பதிகங்களிற் பல இடங்களிலும் குறிக்கப்பெற்றுளது. பண்டை நாளில் வாழ்ந்த இசைவாணர்கள், துணிக்கருவியாகிய வேய்ங் குழலையும் நரம்புக் கருவியாகிய யாழையும் துணையாகக் கொண்டே ஏழிசைத் திறங்களையும் குற்றமற இசைத்து இனிய இசை நுட்பங்களே நன்கு புலப்படுத்திக்காட்டி யுள்ளார்கள் இச்செய்தி, - . 'குழவினும் யாழினும் குரல்முதல் ஏழும் வழுவின் திசைத்து வழித்திறங் காட்டும் அரும்பெறல் மரபிற் பெரும்பாண் இருக்கையும்' (இந்திர - 35-8) னைவரும் சிலப்பதிகாரத் தொடரால் இனிது விளங்கும். இசையின் இனிமையைப் பெருக்கிக் காட்டும் இசைக் கருவிகளுள் குழலும் யாழுமே தனிச்சிறப்புடையன என்பது "குழலினி தியாழினிதென்ப" எனவரும் திருக்குறளால் நன்கு புலனும். குழல் அடர்ந்து வளர்ந்த மூங்கிற் காடுகளில் வண்டுகள் மூங்கிலில் துளை செய்ய, அத்துளைகளின் வழியே காற்றுப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இசைத்தமிழ்.pdf/127&oldid=744978" இலிருந்து மீள்விக்கப்பட்டது