பக்கம்:இசைத்தமிழ்.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

128 நோரதன் வீணே நயந்தெரிபாடலும்" எனவரும் சிலப்பதிகாரத் தொடராற் புலளும். யாழும் வீணையும் இருவோறு கருவிகள் என்பது 'அறைகலந்த குழல் மொந்தை வீணையாழும்’ (6.40-2) "பண்ணுெடி பாழ்வினை பயின்ருய் போற்றி’ (6–57-10) ',ஏழிசையாழ் வினை முர லக்கண்டேன்’ (6-77-1) எனத் திருதாவுக்கரசடிகளாரும், "குடமுழவங் கொக்கரை வினை குழல் யாழ்' (ஆதியுலா) எனச் சேரமான் பெருமாள் நாயனரும், "இன்னிசை வீண்ணயர் யாழினர் ஒருபால்’’ (திருவாசகம்) எனத் திருவாதவூரடிகளும், SS SSAS SSAS SSAS SSAS "புகலுமிசை நேர்வை த்த வீணக்கும் யாழுக்கும் நிலவகையிற் சேர்வுற்ற தந்திரிகள்' (பெரிய-திருநாளேப்-14) எனச் சேக்கிழாரடிகளும் இவ்விரண்டினையும் இருவேறு இசைக்கருவிகளாகப் பிரித்துரைத்தலால் இனிது புலளும். சங்க காலத்திற்குப்பின் தோன்றிய நூல்களிற் குறிக்கப் பெற்றுள்ள வீணையாகிய நரம்புக் கருவி, ஒரே முறையில் தொடர்ந்து செல்லும் தொடரிசையினை வாசித்தற்கேற்றது. பழந்தமிழர் கையாண்ட யாழ்க் கருவி தொடரிசையுடன் பலரும் சேந்து பாடும் நிலையில் அமைந்த ஒத்திசைப் பண்களை வாசித்தற்கேற்ற அமைப்புடையதாகும். சங்கச் செய்யுட்களில் யாழின் அமைப்பினைப்பற்றி அமைந்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இசைத்தமிழ்.pdf/138&oldid=744987" இலிருந்து மீள்விக்கப்பட்டது