பக்கம்:இசைத்தமிழ்.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#52 இடைமடக்கி நான்கடியாதலும் ஈற்றடி ஒருசீர் மிகுதலும் உடைத்து என்பதனை இது கந்திருவ மார்க்கத்தான் இடைமடக்கி நான்கடியாதலும் ஈற்றடி ஒரு சீர்மிகுதலும் உடைத்தென்பது (செய், 149) எனவரும் பேராசிரியர் உரையால் உணரலாம். 'கொன்றை வேய்ந்த செல்வ னடியிணை யென்று மேத்தித் தொழுவோம் யாமே” என்பது கந்திருவ மார்க்கமாதலின் (செய், 149) எனப் பேராசிரியர் குறிப்பிடுதலால் அவர்காலத்தில் இஃது இசைப்பாடலாக இசையுடன் பாடப்பெற்ற தென்பது புலளும். இயற்றமிழில், செந்துறை வண்ணப்பகுதி பற்றிய பாடல், பாடாண்டிணையுட் பயின்று வரும் என்பதனை, வழங்கியன் மருங்கின் வகைபட நிலை இப் பரவலும் புகழ்ச்சியுங் கருதிய பாங்கினும் முன்னேர் கூறிய குறிப்பினுஞ் செந்துறை வண்ணப்பகுதி வரைவின்ருங்கே’ (தொல். புறத்.27) என வரும் நூற்பாவில் தொல்காப்பியர் குறித்துள்ளார். இதனுற் சொல்லியது, தேவபாணியும் அகப்பொருள் பாடும் பாட்டும் இசைத்தமிழில் வரைந்து ஒதினாற் போலச் செந்துறைப்பாட்டிற்கு உரிய செய்யுள் இவையென்று உரைத்தல் இல்லை, பாடாண் பாட்டின்கண் வருங்காலத் தென்பது. எனவே எல்லாச் செய்யுளும் ஆம் என நூற் பாவின் கருத்தினை விளக்குவர் இளம்பூரணர். இவை செந்துறைமார்க்கத்து வண்ணப்பகுதியாகிய பாடல் பற்றி வருமென்பது உம், வெண்டுறை மார்க்கமாகிய நாடகத்துள் அவிநயத்துக்கு உரியவாகி வருமென்பது உங் கூறின்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இசைத்தமிழ்.pdf/162&oldid=745014" இலிருந்து மீள்விக்கப்பட்டது