பக்கம்:இசைத்தமிழ்.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

159 எனவரும் பேராசிரியர் உரை, பண்ணத்தி என்னும் நாடடுப்புற இசைநாடகப் பாடல்களின் இயல்பினை நன்கு புலப்படுத்துவதாகும், பண்ணைத் தோற்றுவித்தலின் பண்ணத்தி யென்ருயிற்று என இளம்பூரணர் தரும் விளக்கமும் இங்கு ஒப்பு நோக்கற்பாலதாகும். சேரமுனிவராகிய இளங்கோவடிகள் இயற்றிய சிலப் பதிகாரம் இயல் இசை நாடகம் என்னும் முத்தமிழ்க் கூறு களும் ஒழிங்கே அமைந்த காப்பியம் ஆதலால் அதன்கண் இயற்பாடல்களுடன் இசை நாடகத் தமிழுக்குரிய செந் துறை வெண்டுறைகளாகிய இசைத்தமிழ்ப் பாடல்களும் அமைந்துள்ளமை காணலாம். தமிழில் இசைப்பாட்டின் இலக்கணத்தினை ஆராய்ந்துணர்தற்குச் சிலப்பதிகாரம் பெரிதும் துணைபுரிவதாகும். உரை சாலடிகள் அருளிய முத்தமிழ்க் காப்பியமாகிய சிலப்பதிகாரத்தின் தொடக்கப் பகுதியாகிய மங்கல வாழ்த்துப்பாடல், இயற்றமிழுக்கும், இசைத்தமிழுக்கும் பொதுவாகிய இசைநலங்களைப் பெற்று மயங்கிசைக் கொச்சகக் கலிப்பாவிற்குச் சிறந்த இலக்கியமாகத் திகழ் கின்றது. கடலாடிய கோவலனும், மாதவியும் கழிக்கானலிடத்து யாழ்ப்பாட்டு நிகழ்த்திய செய்தியைக் கூறுவது கானல் வரி. இஃது இசைப் பாவாற் பெற்ற பெயர். இதன்கண் கட்டுரை என்ற பகுதியை அடுத்துக் கோவலன் பாடியன வாக ஆற்றுவரி (3), சார்த்து வரி (3) முகமில்வரி (4) கானல்வரி (2) நிலைவரி (3) முரிவரி (3) திணைநிலைவரி (மூவகைச் சந்தங்களில் (i-3, 4-6, 7) என 22 இசைப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இசைத்தமிழ்.pdf/169&oldid=745021" இலிருந்து மீள்விக்கப்பட்டது