பக்கம்:இசைத்தமிழ்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10 சிகண்டி யென்னும் செந்தமிழ் முனிவர் இயற்றிய இசைநுணுக்கமும், யாமளேந்திரர் செய்த இந்திரகாளி யமும், அறிவனர் செய்த பஞ்சமரபும், ஆதிவாயிலார் செய்த பரத சேபைதீயமும், பாண்டியன் மதிவாணனர் செய்த மதிவாணர் நாடகத்தமிழ் நூலும் ஆகிய ஐந்து நூல்களும் அடியார்க்கு நல்லார் காலத்தே தமிழ் மக்களால் பயிலப் பெற்றன என்பதும் இவற்றில் சொல்லப்பட்ட இசைநாடக முடிபுகளை ஒருபுடையொப்புமையாகக் கொண்டு சிலப்பதி காரத்திற்கு அடியார்க்கு நல்லார் விரிவுரையியற்றினர் என்பதும் சிலப்பதிகார உரைப்பாயிரத்தே கூறப்பட்டன இந்நூல்களும் பிற்காலத்தே மறைந்தன (கலாக்ஷேத்திர வெளியீடான பரத சேனுபதீயம் ஆதிவாயிலார் இயற்றிய தன்று) இவற்றிலிருந்து மேற்கோளாகக் காட்டப்பட்ட ஒருசில சூத்திரங்களே இந்நாளில் கிடைக்கின்றன. சிலப் பதிகார உரைப்பகுதியிலும் இசைத் தமிழ்த்திறம் விளக்கும் கானல்வரியுரை கிடைக்கவில்லை. இப்பொழுது நமக்குக் கிடைத்துள்ள தமிழ் நூல்களிலே பண்டை இசைத்தமிழ் மரபினையும், குழல், யாழ் முதலிய இசைக்கருவிகளையும் இசைபாடும் முறையினையும் அம்முறை தவறினுல் ஏற்படும் வழுக்களையும் குறிப்பிடும் பகுதிகள் மிகப்பலவுள்ளன. குமரியாறு கடல்கோளால் அழிவதற்கு முன் இடைச்சங்கத் தொடக்கத்திலே இயற்றப்பெற்ற தொல்காப்பியம் என்னும் இயற்றமிழ் நூலானது இன் றளவும் சிதையாது வழங்கி வருகின்றது. இயற்றமிழ்ச் செய்யுளாராய்ச்சிக்கு இன்றியமையாது வேண்டப்பெறுவன வாகிய இசைநூல் முடிபுகளும் கூத்துநூல் முடிபுகளும் இந்நூலில் கூறப்பட்டுள்ளன. பத்துப்பாட்டு, எட்டுத் தொகை, திருக்குறள் ஆகிய பழந்தமிழ் நூல்களிலும் கி.பி.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இசைத்தமிழ்.pdf/17&oldid=745022" இலிருந்து மீள்விக்கப்பட்டது