பக்கம்:இசைத்தமிழ்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#2 கி.பி. முன்ரும் நூற்ருண்டு முதல் ஆரும் நூற்ருண்டு வரையுள்ள காலப்பகுதி தமிழக வரலாற்றில் இருண்ட காலம் எனப் பேசப்படுகின்றது. அப்போது இசைக்கலை மிகவும் அருகி மறையத் தொடங்கியது. தமிழரது வாழ்க் கையோடு தொடர்பில்லாத வேற்றின மக்களும் வேற்றுச் சமயங்களும் தமிழ்நாட்டிலே புகுந்து வேருன்றினமையால் தமிழ் மக்கள் தம் தெய்வக் கொள்கையில் நெகிழ்ந்து மனவுறுதி இழந்தவராய்த் தமது இசை முதலிய கலைநலங் களையும் இழந்து சோர்வுற்றனர். இத்தகைய அல்லற் காலத்தும் இசைத்தமிழ் வழக்கிழந்து சிதையாதபடி அரு ளாசிரியர்கள் சிலர் தோன்றி இயலையும் இசையையும் வளர்த்தனர். இக்காலத்தே வாழ்ந்த காரைக்காலம்மை யார் அருளிச் செய்த திருவாலங்காட்டு மூத்த திருப்பதி கங்கள் தெய்வத் தமிழிசைப் பாடலுக்குச் சிறப்புடைய இலக்கியங்களாகத் திகழ்கின்றன. திருநாவுக்கரசரும், திருஞானசம்பந்தரும் வாழ்ந்த காலம் கி.பி. 650 வரையில் ஆகுமென ஆராய்ச்சியாளர் கள் கூறுவர். திருவெருக்கத்தம்புலியூரில் வாழ்ந்த திரு நீலகண்ட யாழ்ப்பாணர் தம் மனைவியார் மதங்கசூளாமணி யுடன் சீகாழிப்பதிக்கு வந்து ஆளுடைய பிள்ளையாரை வணங்கி அவர் பாடியருளிய இயலிசைப் பாடல்களாகிய திருப்பதிகங்களைத் தம் யாழிலிசைத்துப் பாடித் தமிழ்நாடெங் கும் இசை வளர்த்தாரென்பது வரலாறு அவர் வாசித்த யாழ்க்கருவி சகோடயாழ் என்னும் பெயருடையதாகும். திரு நாவுக்கரசு சுவாமிகள் காலத்தவனை மகேந்திர வர்மன் என்னும் பல்லவ மன்னன் இசை, நாடகம், ஒவியம் முதலிய கலைகளில் வல்லவன். புதுக்கோட்டையினை அடுத்துள்ள

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இசைத்தமிழ்.pdf/19&oldid=745044" இலிருந்து மீள்விக்கப்பட்டது