பக்கம்:இசைத்தமிழ்.pdf/208

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

198 அரசர் அண்ணுமலை வள்ளலவர்களின் விருப்பத்திற்கும் தமிழ் மக்களின் ஆதரவிற்கும் ஏற்ப, அண்ணுமலைப் பல்கலைக் கழகம், தமிழிசை வளர்ச்சிக்குத் தன் பணிகளை விரைந்து செய்யத் தொடங்கியது. தமிழிசை பற்றிய இருபது தொகுதி கள் பல்கலைக்கழக வெளியீடாகச் சில ஆண்டுகளுக் குள் வெளிவந்தன. இவற்றிற்குப் பின்னும் சில இசைத் தமிழ் நூல்களை அண்ணுமலைப் பல்கலைக் கழகம் வெளிப் படுத்தியுள்ளது. இந்நூல்கள் எல்லாவற்றிலும் சேர்த்துப் பார்க்கும்போது, 300க்கு மேற்பட்ட தமிழிசைப் பாடல்கள் 230 வரை உள்ள இராகங்களில் அமைந்துள்ளமை காண லாம். சிறந்த இசைவாணர்கள், இப்பாடல்களுக்கு இசையமைத்துள்ளனர். மேற்குறிப்பிட்ட தொகுதிகளில் அடங்கிய இசை இயல், தமிழர் இசைக்கருவிகள், சுரமேள கலாநிதி, மத்தளம் கற்கும் முறையும் அதன் சிறப்பு வகை யும், பரத சங்கிரகம் என்ற நூல்கள் தென்னுட்டு இசை இலக்கண அமைதிகளைத் தெளிவாக விளக்கத்தக்கன. மிருதங்கம் பயிலும் மாணவர் திறமைபெறும் வண்ணம் இப்பல்கலைக்கழகம் வெளிப்படுத்திய மிருதங்க பாடமுறை என்னும் நூலும் இத்தொகுதிகளில் ஒன்ருகும். தமிழிசைக்கு அரும்பெரும் தொண்டுகள் புரிந்த அண்ணுமலை வள்ளல் அவர்களைப் பாராட்டியும் வாழ்த்தியும் பல சமயங்களில் தக்க புலவர்கள் இயற்றிய பாடல்கள், சிறந்த இசை வாணர்களால் இசை யமைக்கப் பெற்றுச், செட்டி நாட்டரசர் இசைமாலே என்னும் பெயருடன் அண்ணுமலைப் பல்கலைக்கழக வெள்ளி விழாவின்போது வெளிவந்தது. இசையில் தேர்ச்சிபெற்றிருந்தும் மிகுதியான தமி ழிசைப் பாடல்களேக் கற்றுக்கொள்ளாதவர்கள் அவற்றைக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இசைத்தமிழ்.pdf/208&oldid=745064" இலிருந்து மீள்விக்கப்பட்டது