பக்கம்:இசைத்தமிழ்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58 தேவார ஆசிரியர்கள் மூவரும் பாடியனவாக மேற் குறித்த எல்லாத் திருப்பதிகங்களும் பிற்காலத்தார்க்குக் கிடைக்கவில்லை. செல்லரித்துச் சிதைந்தமையால் மறைந் தன போக எஞ்சிய பதிகங்களையே நம்பியாண்டார் நம்பி சோழ மன்னன் ஆதரவு கொண்டு தேடி முன்போல் முறைப்படுத்தி ஏழு திருமுறைகளாகத் தொகுத்தார் எனத் திருமுறைகண்ட புராணம் கூறுகிறது. திருஞானசம்பந்தர் தேவாரப்பதிகங்கள் 384-ம் திரு நாவுக்கரசர் தேவாரப் பதிகங்கள் 310-ம் சுந்தரர் தேவாரப் பதிகங்கள் 100-ம் நம்பியாண்டார் நம்பிகளால் தொகுக்கப்பட்டன. இங்ங்ணம் வகுக்கப்பட்ட ஏழு திருமுறைகளும் பண் ளுகிய இசைமுறை பற்றியும் பாவாகிய இயல்முறை கருதி யும் முறைப்படுத்தப் பெற்றிருத்தல் வேண்டுமென்பது, இவற்றிற் காணப்படும் பண்களெல்லாவற்றிற்கும் கட்டளை யாகிய யாப்பியல் வகை கூறும் திருமுறைகண்ட புராணப் பகுதியால் இனிது புலனும். சேக்கிழார் நாயனர்க்கு நெடுங்காலத்திற்கு முன்னரே மூவர் தேவாரத் திருப்பதிகங் களும் பண் முறைபற்றிக் கட்டளைகள் வகுக்கப்பெற்று முறைப்படுத்தப்பெற்றிருந்தன வென்பது பெரிய புராணத் தில் மூவர்வரலாறு கூறும் இடங்களில் தேவாரத் திருப் பதிகங்கள் சிலவற்றிற்குப் பண்ணமைதியும் கட்டளைக் கூறுபாடும் குறிக்கப்பெற்றிருத்தலால் நன்கு விளங்கும். இப்பொழுது வழங்கப்பெற்றுவரும் மூவர் தேவாரப் பதிப்புக்களில் 796 திருப்பதிகங்கள் அடங்கியுள்ளன. தடுத்தாட் கொண்ட புராணம் 75-ஆம் செய்யுள் 2 திருஞானசம்பந்தர் புராணம் 187-ஆம் செய்யுள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இசைத்தமிழ்.pdf/75&oldid=745130" இலிருந்து மீள்விக்கப்பட்டது