பக்கம்:இசைமணி மஞ்சரி.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கறுகிறேன். இவ்வரிய இசைநூலை இசை உலகம் பயன்படுத்திக் கொள்ளும் என்பதில் ஐயமே இல்லை. இதற்குமுன் திரு. தூரன் அவர்களால் வெளியிடப் பட்டுள்ள இசைநூல் தொகுதிகளுக்கு சங்கீதகலாநிதி பூநீ டைகர் வரதாச்சாரியார், சங்கீத கலாநிதி பூ முசிரி சுப்பிரமணிய அய்யர் அவர்களும், அமரர் கல்கி ரா. கிருஷ்ணமூர்த்தி அவர்களும் முகவுரை, கருத்துரை அளித்துள்ளார்கள். அப் பெரியோர்கள் முகவுரையில் கடறியுள்ளதை விட அதிகமாகக் கூற எனக்கு அவர் கள் இடம் வைக்கவில்லை; அவ்வளவு அழகாகக் கடறி யுள்ளார்கள். திரு. தூரன் அவர்கள் தமிழுக்குச் செய்யும் தொண்டுகளை எவ்வளவு போற்றிலுைம் தகும். கலைக் களஞ்சியம் என்னும் மாபெரும் நூலை உருவாக்கிப் பெரும் தொண்டாற்றியுள்ளார். மேலும் குழந்தைகள் கலைக்களஞ்சியம் ஒன்றையும் உருவாக்குவதில் இப் பொழுது ஈடுபட்டிருக்கின்ருர். கவிதை முதலான வேறு நூல்களையும் இயற்றியிருக்கிருர்கள். இவற்றுடன் தெய்வத்திடம் உள்ள பக்திப் பெருக் காலும், இசையில் உள்ள பிரேமை, பாண்டியத்தின லும் தமிழ் இசை மூலம் தமிழ்த் தாய்க்குத் தொண் டாற்றி வருகிருர், திரு. தூரன் அவர்களுக்கு காம் கவும் கடமைப்பட்டுள்ளோம் என்பதை மகிழ்ச்சி யுடன் கூற விரும்புகிறேன். இவ்வாறு தமிழுக்கும், தமிழ் இசைக்கும் தொண்டாற்றி வர ஆண்டவன் இவ ருக்கு நீண்ட ஆயுளையும் சக்தியையும் அளிப்பாராக. ದಿರ್ಕŠ್ರಹಿತ, இங்கனம், 1527, 1970 செம்மங்குடி ரா. ரீநிவாலய்யர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இசைமணி_மஞ்சரி.pdf/8&oldid=745333" இலிருந்து மீள்விக்கப்பட்டது