பக்கம்:இசையமுது 1, 1984.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிறுவர் பகுதி சிறார் பொறுப்பு இன்று குழந்தைகள் நீங்கள் - எனினும் இனி இந்த நாட்டினை ஆளப்பிறந்தீர்! இன்று குழந்தைகள் நீங்கள்! நன்றாய்ப் படியுங்கள்! நாட்டின் குழந்தைகள்! ஒன்றாய் இருங்கள் உயர்வினை எண்ணுங்கள்! இன்று குழந்தைகள் நீங்கள்! குன்றினைப் போல் உடல்வன்மை வேண்டும்! கொடுமை தீர்க்கப்போ ராடுதல் வேண்டும்! தின்றதையே தின்று தெவிட்டுதல் இல்லாமல் அன்றன்று வாழ்விற் புதுமை காணவேண்டும்! இன்று குழந்தைகள் நீங்கள்! பல்கலை ஆய்ந்து தொழில்பல சுற்றும் பாட்டிற் சுவைகாணும் திறமையும் உற்றும் அல்லும் பகலும் இந்நாட்டுக் குழைப்பீர்கள்! அறிவுடன் ஆண்மையைக் கூவி அழைப்பீர்கள்! இன்று குழைந்தைகள் நீங்கள்! 19

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இசையமுது_1,_1984.pdf/20&oldid=1443336" இலிருந்து மீள்விக்கப்பட்டது