உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இசையமுது 1, 1984.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சிறுவர் பகுதி

22


பொறுமை

பொறுமைதான் உன்றன் உடைமை! அதைப்
போற்றலே கடமை!


பொறுமையாற் கழியும்  நாளிலே
புதுவன்மை சேருமுன்  தோளிலே!
பொறுமைதான் உன்றன் உடைமை!  தோளிலே!
 
பொறுமையுடைய ஏழையே  கொடையன்!
பொறுமையிலாதவன்  கடையன்!
இறைவனே எனினும் பிழை  செய்தோன்
ஏதுமற்றவனாகி  நைவான்!
பொறுமைதான் உன்றன் உடைமை! 
 
பலமுறை பொறுப்பாய்  வேறு
பழுதும் நேருமெனில்  சீறு!
நிலைமை மிஞ்சுகையில் பகைவனை 
நீறாக்கலே பொறுமையின் பயன் 

பொறுமைதான் உன்றன் உடைமை!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இசையமுது_1,_1984.pdf/24&oldid=1647051" இலிருந்து மீள்விக்கப்பட்டது