பக்கம்:இசையமுது 1, 1984.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 நிலா முழுமை நிலா! அழகு நிலா! முளைத்தது விண் மேலே - அது பழைமையிலே புதுநினைவு பாய்ந்தெழுந்தாற் போலே! அழுதமுகம் சிரித்ததுபோல் அல்லிவிரித் தாற்போல்,-மேல் சுழற்றி எரிந்த வெள்ளித்தட்டுத் தொத்திக்கிடந் தாற்போல் முழுமை நிலா! அழகு நிலா! குருட்டு விழியும் திறந்ததுபோல் இருட்டில் வான விளக்கு!-நம் பொருட்டு வந்தது பாடிஆடிப் பொழுது போக்கத் துவங்கு! மரத்தின் அடியில் நிலவுவெளிச்சம் மயிலின் தோகை விழிகள்!-பிற தெருக்கள் எல்லாம் குளிரும் ஒளியும் சேர்த்து மெழுகும் வழிகள்! முழுமை நிலா! அழகு நிலா! இசையமுது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இசையமுது_1,_1984.pdf/27&oldid=1443342" இலிருந்து மீள்விக்கப்பட்டது