பக்கம்:இசையமுது 2, 1952.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இரண்டாம் பகுதி 77 தமிழை யுயர்த்தினார் தாமுயர் வுற்றார் என்றசொல் நாட்டினால், இறவா நற்புகழ் நன்று வாய்ந்திடும் என்ற நடுக்கமோ ? தமிழின் தொண்டு தரித்திர வயிற்றுக்கு- அமிழ்தம் அன்றோ அண்ணன்மாரே ! ஆவன தமிழுக் காற்றுதல் சிறிதே, ஈவது சிறிதே இன்ப மொழிக்கு ! வருத்தச் சேதி இஃதொன்று மட்டுமா? ஒருவர் ஒன்று தமிழ்நலம் உன்னி இயற்ற முன் வந்திடில், இடையூறு பற்பல இயற்ற முன்வருவதை என்ன என்பது! சேர்ந்து தொண்டாற்றுதல் சிறப்பா? அன்றிக். காய்ந்தும், முணுத்துக் கசந்தும் கலகம் செய்தும் திரிதல் சிறப்பா ? செப்புக! குள்ள நெஞ்சினர் கொடுமை செய்வதைத் தெள்ளிய நெஞ்சினர் தீர்த்தும், தமிழில் அன்பிலாத் தமிழரை அன்பில் தோய்த்தும். தென்பா லெழுந்த தீந்தமிழ்ச் சுடரை வானிடை எழுமோர்' வண்மைச் சுடராய்ச் செய்யமுன் வருக தமிழரே. உய்ய நம்மவர்க்கீங் குறுதுணை அஃதே! 27

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இசையமுது_2,_1952.pdf/37&oldid=1500218" இலிருந்து மீள்விக்கப்பட்டது