பக்கம்:இசையமுது 2, 1952.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 வாய்மை முரசு இசையமுது மனிதன் உண்போன் ; மற்றவும் உண்பன! மற்றவை உறங்கும் ; மனிதனும் உறங்குவான்! இன்புறும் பிறஉயிர்; இவனும் ஆங்ஙனே ! துன்புறுவான் இவன் ; துன்புறும் பிறவும் ! மனிதன் அறிபவன்; மற்றவும் அறிவன! மனித னுக்கு ; மற்ற உயிர்கட்குக் குறிகள் உண்டு; நெறிகள் உண்டு ! மனிதன் ஏன் நிலத்தில் வாய்த்த உயிர்களில் "இனியோன் சிறந்தோன்" எனப்படு கின்றான்? முளைத்த விலங்கு முதற், சுள் ளான்வரை உள்ள உயிர்கட் கில்லாத தென்ன? மனித னிடத்தில் வாய்த்த சிறப்பெது? கேளீர், அதனைக் கேளீர், கேளீரே. " உள்ளம் கண்டதை உள்ளவர்க் குரைத்தல்" என்பது, மனித னிடத்தில் தானுண்டு! பிற உயிர்களிடம் பிரசாரம் செய்யும் தனி ஒருமேன்மை சற்றும் இல்லை : இம்மி கூட இல்லை என்ற றிக ! உள்ளங் கண்டதை உலகுக் குரைத்தல் மற்றவற் றினின்று மனிதனைப் பிரிப்பது; மனித னுக்கு மாண்பு தருவது 1

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இசையமுது_2,_1952.pdf/54&oldid=1500245" இலிருந்து மீள்விக்கப்பட்டது