பக்கம்:இசையமுது 2, 1952.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இரண்டாம் பகுதி திராவிடர் இடியப்பக் காரா-ஓ-இடியப்பக் காரா ! விடியற் காலம் தட்டைத் தூக்கி வீட்டார் கேட்கக் கூவி வந்தாய் இடியப்பக் காரா! செப்ப னிட்ட வீட்டுக் காரன் தெலுங்கு பேசும் மீசைக்காரன் அப்பமு வெல ஏமி என்றான். அயலான் அவன் என நினைத்தாய் எப்படி அவன் அயல் ஆவான் இன ஒழுக்கம் குறைந்த துண்டோ? செப்பும் மொழி தெலுங் கென்றால் தெலுங்கு மொழியும் உன் உடைமை ! இடியப்பக் காரா! அடிமரமே ஒன்றேடா அதன் பெயர்தி ராவிடமே தடங்கிளைகள் ஐந்தல்லவா தமிழ், தெலுங்கு, கேரளமே. அடடேகன் னடம், துளுவம், ஐங்கிளைக்கும் அடிஒன்றே கொடிது கொடிது தெலுங்கனை நீ குறைகூறும் மனப்பான்மை இடியப்பக் காரா ! 55

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இசையமுது_2,_1952.pdf/69&oldid=1500267" இலிருந்து மீள்விக்கப்பட்டது