பக்கம்:இசையமுது 2, 1952.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56 ஐந்து நிறத்தில் மணிக் கோவை அவற்றூடே செல்லுவது பொன்னிழையே அல்லாமல் பூணூலா சொல்லிடுவாய் சென்னைக் காரன் கோழி என்பான் தெலுங்குகாரன் கோடி என்பான் இசையமுது? கன்னடத்தான் கோளி என்பான் களிச் சேரலன் கோலி என்பான் துளுவக் காரன் கோழ் என்பான் சொன்ன இந்த ஐந்திலும் நீ ஒளிக்கும் உயிரைப் பார்த்த துண்டோ உள்ள பொதுமை கண்ட துண்டோ தெளிவி லார்க்கும் தெரிவியடா திராவிடம்/திராவிடமே!! ஒளிக்காதே உன் மனத்தை உயர் தெலுங்கன் நம்மவனே இடியப்பக் காரா! தெலுங்கனா உன் பகைவன்? ஒரு சேரலனா உன் பகைவன்? துலங்கும் ஒரு கன்னடனா? துளுவனுமா உன் பகைவன் ? உலர்சருகே இவர்க ளெலாம். உன்பகைவர் என்றுசொன்னால் நலம்புரியும் உறவினர்கள் நாட்டி லெவர் தாம் உனக்கு? இடியப்பக் காரா!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இசையமுது_2,_1952.pdf/70&oldid=1500265" இலிருந்து மீள்விக்கப்பட்டது