இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முழு முதற் பொருளே
நவரஸக்கன்னடா
47
ஆதி
பல்லவி
கனநாதனே கௌரிபாலனே
கமழ்ப்பாதமேநான் கருதினேனே
(கன)
அனுபல்லவி
மனமகிழ்வோடிம் மகிதலம்போற்றும்
மாட்சிமைபெரும்மீ னாட்சியின்குமாரா
(கன)
சரணம்
தினமேசுதின மெனஎண்ணி உன்னைத்
துதிசெய்தேன் நானே தும்பிமுகத்தோனே
முனமோர்பாரதம் முற்றிலும் அன்பாக
முடித்தஸ்ரீகிருஷ்ண மூர்த்தியின்மருகா
(கன)
55