பக்கம்:இசையின்பம்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

som un கண்டதுண்டோடி என் காதலரை பைரவி 66 பல்லவி கண்டதுண்டோடி என்காதலரை எங்கேனும் காரிகையே-நீ (கண்ட)

அனுபல்லவி 1 அண்டர்படைக்காவலனை ஆதிசக்திதன் பாலனை தொண்டர் பணியும்சீலனை சோதிவடி வேலவனைக் (கண்ட) சரணங்கள் பண்டைய நாள் பழக்கமடி இன்றுதேற்றல்ல பழகியறிந்துசுகம் மனமும்மறக்குதில்லை எண்டிசைநோக்கினும் அவ்வெழில்முகம் அல்லாமல் வேறு ஒன்றையும்காரது உள்ளம் உருகித்தவித்ததடி (கண்ட) கொண்டவர் போல் வந்தென் கோபக் குறிப்பறித்தே குலவிக் குலவிமுத்தம் கொடுத்துக் கொடுத்துக்கொஞ்சி அமுதத் தண்டமிழ்ப்பேசி யென்னுடல் உயிரில் ஒன்றாய்கலத்த சர்வபரிபூரணனை சண்முகனென்னும் தீரனைக் (கண்ட) '74

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இசையின்பம்.pdf/74&oldid=1278554" இலிருந்து மீள்விக்கப்பட்டது