பக்கம்:இட்ட சாவம் முட்டியது.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

— 4 —

போக்கிரிகளையும் (Social Rogue) பார்ப்பான் என்கிற ஒரே காரணத்துக்காக அவன் மன, அறிவுக் குறும்புச் செயல்களை அடியோடு மறைத்து மண்ணிட்டு மூடி, சமசுக்கிருத வேத மந்திரங்களை — உரக்கக் கத்தி மேலுக்குத் தூக்கி, வானுக்கு உயர்த்தி, வாழ்த்துப் பாடி முடித்துவிட்டனர். இந்த வகையில் பார்ப்பனப் பெருச்சாளிகளும், அரசியல் அரம்பர்களும், மதவியல் சூதர்களும் மக்களால் மலர் மாலையிட்டு வணங்கத்தக்க உருவங்களாகி விடுகின்றனர்.

இராசீவ் வெடித்துச் சிதறிய நாள் முதல், ஒரு கிழமையாகப் பார்ப்பன நச்சுப் பாம்புகள் தொலைக்காட்சி, வானொலி எங்கும் படமெடுத்தாடின. அவர் இறப்பைச் சாக்கிட்டு, ஏழு நாள்கள் துயர ‘முகாரி' பாடின, தொலைக் காட்சியும் வானொலியும்! ஒரு கிழமை ஒதுக்கீட்டை நெருக்கடிநிலைக் காலம் போல் கருதி, பார்ப்பனர்கள் தங்கள் விருப்பம் போல் நன்கு பயன்படுத்திக் கொண்டு, இவ்விந்திய நாட்டைச் சார்ந்த ஏமாளி எவனும் 'ஏன்' 'எதற்கு' என்று கேட்காத வகையில், தங்களின் 'வேத வித்யா சாகர, சர்வ வியாபக, சத்துவ சனாதன சம்ப்ரதாய சம்ரக்ஷணைகளை' வலுப்படுத்திக் கொள்ள, தங்களின் வம்சாசாதனசம்ப் பத்துகளான பாகவதப் ப்ரஸங்கங்கள், பக்தி பஜன்கள், பகவத் ஸங்கீத நாமார்த்தனங்கள், வேத, புராண, இதிகாஸ ஆலாபனைகள், சத் கதா காலக்ஷேபங்கள், ஆதிஸங்க்ர அதிமோக்ஷ ஸ்தோத்திரங்கள், சமஸ்கிருத வேத மந்த்ர பாராயணங்கள், ஸமத்கார சங்கீத தாள நர்த்தனங்கள் (தூய தமிழ் அன்பர்கள் பொறுத்துக் கொள்க! அவற்றை அவாள் மொழியிலேயே சொல்வதே 'ஸ்ரேஷ்டம்' (!) என்பதால் இவ்வாறு எழுதப் பெற்றன என்க) — முதலிய பச்சைப் பார்ப்பனக் கூத்தடிப்புகளை இந்த ஏழு இருண்ட நாள்களிலும் கேட்டு, நாம் 'பாரத' இந்தியாவில்தான் பார்ப்பன ஆட்சியில்தான் இன்னமும் இருக்கிறோம் என்பதை மேலும் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டுவதாயிற்று!