பக்கம்:இதன் விலை ரூபாய் மூவாயிரம், அண்ணாதுரை.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

48



ஆதரிக்க முன்வரமாட்டார்களெனக் கட்டுரையாளர் தந்துரைக்கிறார் "பார்ப்பனியம் பிரித்தானியம் போலவே ஒழிக்கவேண்டிய முறையாகும்" ஆதிக்கக்காரர்கள் வசைபாடுவார்களேயென்று நாம் அஞ்சத் தேவையில்லையெனக்கட்டுரையாளர் இறுதியாகக் குறிப்பிட்டிருக்கிறார்., மகாத்மாஜீயின் சாக்காட்டைக் குறிப்பிட்டு கட்டுரையாளர் கூறுவதாவது:—

உத்தமர் உண்மைக்காக உயிரைத் தந்தபோது நாம் சாதாரண புகழை, பதவியை, இழந்தால்தான் என்ன? நஷ்டம் அல்ல நாட்டுக்கு! விமோசனம்கிடைக்கும்.

இத்தகைய மனுவொன்றின்மீது தீர்ப்பு வழங்கப்போகும் கோர்ட்டாருக்கு கட்டுரையாளர் மேற்படி கட்டுரையில் தந்துள்ள கருத்துரைகள் ஏற்புடைத்தவை தாமா என்பது குறித்துக் கவலையில்லை. தகராறுக்குரிய அனைத்து விஷயங்களிலும் இருவேறுபட்ட வாதங்கள் எழுதுவது இயல்பு. கட்டுரையாளர் தனது கருத்துக்களுக்கு அரணாகத் தருங்காரணங்கள் பொருத்தமானவையா அல்லவா என்பது குறித்துப் பரிசீலனை செய்யும் வேலை நீதி மன்றத்துக்கு இல்லை. பல்வேறுபட்ட சமூகத்தாரிடையே நேரிடையாகவோ மறைமுகமாகவோ பகைமையுணர்ச்சியும் வெறுப்புணர்ச்சியும் வளர்க்கும் வகையில் கட்டுரையில் எதுவும் காணப்படுகிறதா வென்பதைக் கண்டறிவதே இப்போதைய ஒரே பிரச்னையாகும். பார்ப்பனியம் (பிராமணிஸம்) என்ற சொல்லுக்குப் பதிலாக "ஜாதி முறை" என்ற தொடரை கட்டுரையாளர் பிரயோகித்திருப்பாரேயானால். ௸ கட்டுரை மேலே கூறப்பட்ட சட்ட 4 (1) (யெச்) பிரிவின் எல்லைக்குள் வரப்போவதில்லையென அட்வகேட் ஜெனரலே ஒப்புக்கொள்ளுகிறார். அம்முறையைப் பார்ப்பனியம் என்று குறிப்பிடுவதாலேயே சட்டம் அங்கு குறுக்கிடுகிறது என்கிறார். அட்வகேட்——ஜெனரல். சந்தேகத்துக்கு இடம் வைக்காமல், கட்டுரையாளர் பெருவாரியான பிராமணர்களென்றும் பெரும்பான்மையரான பிராமணரல்லாதாரென்றும் இருவகுப்பாகப் பிரித்துக் கூறுகிறார். கட்டுரை ஆரம்பத்தில் பல்வேறு