பக்கம்:இதன் விலை ரூபாய் மூவாயிரம், அண்ணாதுரை.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

5


போல் மேலும் பலர் தோன்றினாலன்றி, பார்ப்பனர் மீது காணும் குறைய வழி பிறக்காது.

அன்று எதிர்ப்புச் செய்தவர்கள் மதியற்ற மண்டலாதிபதிகளால், கழு ஏற்றப்பட்டனர்; கடுந்தண்டனைக்குள்ளாக்கப் பட்டனர். கால மாறுதலால் இன்றைய எதிர்ப்பாளர்களின் பேச்சுக்கும், எழுத்துக்கும் சிறைவாசம், பண நாசம் என்ற தண்டனைகள் தரப்படுகின்றன, அதிகாரத்தின் துணையைக் கொண்டு.

திராவிடப் பெருங்குடி மக்கள், எல்லா வாழ்க்கைத் துறைகளிலும் எவ்வளவு சிறந்த திறமைசாலிகளாக இருந்தாலும், அவர்களைப் பாராட்ட--அவர்களைக் குறித்து இரண்டொரு நல்லவார்த்தை கூற பார்ப்பனத் தோழர்கள் முந்துவது அறவே கிடையாது. சுற்றுச் சார்புகளுக்குக் கட்டுப்பட்டு ஓர் திராவிடரின் திறமையை எடுத்துப் பேசவேண்டிய நெருக்கடி ஏற்படும் பொழுதுங்கூட, "அவன் நல்லா நடிக்கத்தாஞ் செய்யிறான்--இருந்தாலும் நம்ம கொத்தமங்கலம் சுப்புகிட்ட அவன் என்ன செய்யிறது?" என்றுதான் பாராட்டுவர். இது திராவிடரின் திறமைக்கு ஒரு பார்ப்பனத் தோழர் மறைமுகமாகத் தரும் வசையாகும். நாட்டு நடப்பை ஆய்ந்து அறிந்தவர்களாலேயே இந்தப் பேருண்மையை எளிதில் புரிந்து கொள்ள முடியும். நிற்க,

'திராவிட நாடு' இதழில் அறிஞர் அண்ணா அவர்கள் இரு கட்டுரைகள் எழுதியிருந்தார்கள். ஓமந்தூர் இராமசாமியாரைக் கவிழ்க்க காங்கிரஸ் பார்ப்பனர்கள் கங்கணம் கட்டிக் கொண்டு வேலை செய்ததையும் அவர் தப்பிப் பிழைத்ததையும் அடிப்படையாக வைத்துக் கொண்டு, அந்த இரு கட்டுரைகளும் வரையப்பட்டன. 4-4-1948, 18-4-1948 ஆகிய இரண்டு தேதிகளிலும் அக்கட்டுரைகள் வெளிவந்துள்ளன. கட்டுரைகள் வெளியான ஓராண்டு ஒரு திங்கள் கழித்து 25-5-1949ல் சென்னை காங்கிரஸ் ஆட்சி ரூபாய் 3000 ஜாமீன் தொகையாகக் கட்டவேண்டுமென்று, 'திராவிடநாடு' ஆசிரியர் அறிஞர் அண்ணாவுக்குக் கட்டளை பிறப்பித்தது. இந்த அநீதி-