7
ஜாமீன் கேட்டிருக்கிறது. பார்ப்பனர்களை நேரடியாக பல காலமாகவே பலபுலவர்கள் கண்டித்து வந்திருக்கிறார்கள்.
பார்ப்பனர்கள் யாகம் செய்கிறார்கள். அதில் கடவுள் பெயரால் பசு சித்திரவதை செய்து கொல்லப்படுகிறது. இது கண்டு, பார்ப்பனர்களாலேயே வளர்க்கப்பட்டதாகக் கூறப்படும் ஆபுத்திரன், பார்ப்பனர்களைப் பார்த்து,
'நோவன செய்யன்மின்'
எனக் கடிந்துரைக்கிறான். இது மணிமேகலை.
பேர்கொண்ட பார்ப்பான் பிரான்தன்னை அர்ச்சித்தால்
போர்கொண்ட வேந்தர்க்கும் பொல்லாத வியாதியாம்
பார்கொண்ட வேந்தர்க்கும் பஞ்சமுமா மென்றே
சீர்கொண்ட நந்தி தெரிந்துரைத் தானே.
இவ்வாறு கூறினவர் திருமூலர். திருமந்திரத்தில் உள்ளது இது.
'பாப்போடு பழகேல்'
இது பிற்காலத்து ஔவையின் வாக்கு. இதுபற்றி விளக்கம் தந்திருப்பவர் காலஞ் சென்ற கப்பலோட்டிய தமிழா வ. உ. சிதம்பரம் பிள்ளை.
"பாப்புப் பெருத்தல்லவோ சோழ மண்டலம் பாழ்த்ததுவே”
இப்படி ஒரு புலவன், பார்ப்பனர்களின் செயல் கண்டு மனம் நொந்து, வாய்விட்டு, அலறி இருக்கின்றான்.
கம்பனோ ஆரியதாசன். அவன்கூடபார்ப்பனர் வாழ்க்கை முறை கண்டு வருந்தியுள்ளான்.
'முட்டிப்புகும் பார்ப்பாரகத்தை எட்டிப் பாராமோ' என்று ஏளனக் குரல் எழுப்பி உள்ளான் கம்பன்.
ஜாதி முறையின் கேடுகளைக் கண்டு நெஞ்சு பொறுக்காமல் கபிலர் கதறி இருக்கிறார். அகவற்பாவாக அவர் சுட்டிக்காட்-